Monday 30 August 2021

 கல்வி தொலைக்காட்சி பார்த்து ஆர்வத்துடன் பாடங்களை படிக்கும் மாணவர்கள்   

 






தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி   தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் பயிற்சி பாடங்களை ஆர்வத்துடன் பார்த்து படித்து வருகிறார்கள்.

            தமிழகம் முழுவதும்  கரோனா ஊரடங்கால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி தொலைக்காட்சிகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக மாணவ, மாணவிகள், பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் ஒளிபரப்பாகும் நேரங்களை தாளில் எழுதி கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் மாணவர்களுக்கு தொலைபேசி மூலமும் , நேரிலும் வீடு,வீடாக சென்று தொடர்பு கொண்டு கல்வி தொலைக்காட்சி பார்க்க சொல்லியும் வலியுறுத்தி கூறி வருகிறார்கள்.இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான மாணவர்கள் தொடர்ந்து கல்வி தொலைக்காட்சியை பார்த்து பயிற்சிகளை செய்து வருகின்றனர்.

       பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறும்போது, மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை பயின்று பதில் அளித்து வருகின்றனர்.எங்கள் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை தொலைபேசி வழியாக தினமும் காலையில் தொடர்பு கொண்டு கல்வி தொலைக்காட்சியை பார்த்து பயிற்சிகளை செய்து முடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.பல பெற்றோர்கள் அலைபேசி வழியே தொடர்பு கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் குறித்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திகொண்டு வருகின்றனர்.என்றார்.

 

படவிளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வி   தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் பயிற்சி பாடங்களை ஆர்வத்துடன் பார்த்து படித்து வருகிறார்கள்.

 

 

No comments:

Post a Comment