Saturday 21 August 2021

 

 பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு  ஏற்படுத்திய  பள்ளி ஆசிரியர்கள்
 
 கொரோனா தடுப்பு உறுதிமொழி , கவிதை, துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களை உஷார்படுத்திய ஆசிரியர்கள் 
 
 





 
தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

                                               இப்பள்ளி   தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள் ,முத்துலெட்சுமி ,கருப்பையா ஆகியோர் நடராஜபுரம் பகுதியில்  மக்களிடையே  கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். 

                             அதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முகக் கவசங்கள், கிருமிநாசினி பாட்டில்கள் ஆகியவை வழங்கப்பட்டது.மேலும் சோப்புப்போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தினர்.கொரோனா உறுதிமொழி, கொரோனா விழிப்புணர்வு கவிதை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் எழுதிய தட்டிகள் பயன்படுத்தப்பட்டது.கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக விரிவான விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள் ,முத்துலெட்சுமி ,கருப்பையா ஆகியோர் நடராஜபுரம் பகுதியில்  மக்களிடையே  கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். 
 
விழிப்புணர்வு வீடியோ 
 https://www.youtube.com/watch?v=ZKGAQjzA824
 
  
 https://www.youtube.com/watch?v=uE9wH2TF45Q
 
 
 
 
 
 

No comments:

Post a Comment