Thursday 19 August 2021

 பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி கொடுக்கும் தபால்காரர்

பேப்பர் ,பேனா இல்லாமல் அஞ்சல் வங்கி கணக்கு துவக்க ஏற்பாடு செய்த பள்ளி

வங்கிக்கு செல்லாமல் வீட்டுக்கே வந்த பணம் தரும் தபால்காரர்கள்

உங்கள் வங்கி உங்கள் வாசலில்    


















 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டு வாசலுக்கே சென்று   மாணவர்களுக்கு  அஞ்சல் வங்கி கணக்குகளை தபால்காரர் துவக்கி கொடுத்து வருகின்றார்.
                                         
                         பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் இது குறித்து கூறியதாவது : எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை பெற வங்கி கணக்கு ஆரம்பிக்க பெரிதும் சிரமப்பட்டனர்.வங்கியில் குறைந்தது 1000 ரூபாய் இருந்தால்தான் வங்கி கணக்கு துவக்க முடியும்.கொரோனா நேரமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி ,  வீட்டிலேயே வந்து அஞ்சல் வங்கி கணக்கு ஐ.எப்.எஸ்.சி.கோடுடன் துவக்கி கொடுக்க எங்கள் பகுதி தபால்காரர் முத்துக்கருப்பனை அணுகினோம்.அவரும் ஆர்வமுடன் வந்து எங்கள் பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார்  எண்ணை  மட்டுமே பெற்றுக்கொண்டு , பேப்பர், பேனா இல்லாமல் மிக குறைவான இருப்பு தொகை ரூபாய் 100 மட்டுமே பெற்றுக்கொண்டு அஞ்சல் வங்கி கணக்கை துவக்கி கொடுத்தார்.கியூ.ஆர். கோடு கொண்ட அட்டை வாயிலாக கணக்கு செயல்படுத்தப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் கைவிரல் ரேகை வாயிலாக செயல்படுத்தப்படும். மேலும் அந்தந்த பகுதி தபால்காரர்கள் உங்கள் வீட்டுக்கே வந்து வங்கி சேவை அளிப்பார்கள்.  இந்தியாவின் எந்தவொரு வங்கி கணக்கிற்கு எந்த நேரத்திலும் பணம் செலுத்தவும், பெறவும் முடியும்.என்று இதன் சிறப்புகளும் எடுத்துக்கூறப்பட்டது. கொரோனா நேரத்தில் மாணவிகளின் வீடுகளுக்கே சென்று அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி கொடுப்பது பெற்றோர்களிடம் அதிக பாராட்டை பெற்றுள்ளது.இதற்கான விழிப்புணர்வினை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

 பட விளக்கம் : .சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும்  மாணவர்களின்  வீட்டு வாசலுக்கே சென்று    கொரோனா நேரத்திலும் அஞ்சல் வங்கி கணக்குகளை தபால்காரர் முத்துக்கருப்பன் துவக்கி கொடுத்து வருகின்றார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

 

 அஞ்சல் வங்கி கணக்கு துவக்கம் - பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று தபால்காரர் துவக்கிய வீடியோ 

 https://www.youtube.com/watch?v=_8bUmOJO7tA

 https://www.youtube.com/watch?v=HrksxBgrnx8

 

 

 

 

 


No comments:

Post a Comment