Tuesday 25 February 2014

ஆரோக்கியமான குழந்தைகள் உருவாக அயோடின் உப்பை பயன்படுத்துவோம் கருத்தரங்கில் தகவல்.
தேவகோட்டை பிப் ​-26
                                                                    நல்ல சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான குழந்தையாகவும் உருவாக அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும் என உப்பு ஆய்வாளர் வாலிநோக்கம் பாரதி தெரிவித்தார்.
                                                                        தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் அயோடின் உப்பை பயன்படுத்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.மாணவி தேன்மொழி வரவேற்றார்.உப்பு ஆய்வாளர் வாலிநோக்கம் பாரதி மாணவர்களிடம் அயோடினே உப்பின் அவசியம் குறித்து பேசினார்.அவர் பேசுகையில்,
                                                             அயோடின் சத்துகுறைவால் நமக்கு மூளை வளர்ச்சி இன்மை,வாய்னீர்வடிதல்,கருச்சிதைவு,ஊமைத்தன்மை,மாலைகண் நோய் ,முன் கழுத்து கழலை நோய் முதலிய குறைபாடுகள் ஏற்படுகிறது.வருங்காலத்தில் மாணவர்கள் நல்ல சுறுசுறுப்பு உள்ள குழந்தைகளாகவும்,ஆரோக்கிய குழந்தைகளாகவும் உருவாகவேண்டும். அயோடின் சத்தை எதன் மூலமாக மக்களுக்கு செலுத்தலாம் என நினைக்கையில்,எண்ணெய் அல்லது ப்ரெட் மூலம் செலுத்தலாம் என யோசித்தனர்.ஆனால் எல்லா மக்களும் உணவிற்கு உப்பை பயன்படுத்துகின்றனர்.எனவே உப்பின் மூலம் அயோடின் சத்தினை செலுத்தலாம் என தீர்மானித்தனர்.கடல்வாழ் உயிரினங்களில் அயோடின்  சத்து உள்ளது.மீன் மண்டையில் அதிக அளவு அயோடின் உள்ளது.எனவே நாம் அனைவரும் இன்று முதல் அயோடின் இல்லாத உப்பு குப்பையிலே என உறுதி எடுப்போம் என்று பேசினார்.அயோடின் உப்பு அதிகமாக சேர்த்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என மாணவி சிவகாமி கேள்வி எழுப்பினார்.உப்பு எவ்வாறு தயாரிக்கபடுகிறது என மாணவி பரமேஸ்வரி கேள்வி கேட்டார்.மாணவிகளின் கேள்விகளுக்கு வட்டாணம் உப்பு ஆய்வாளார் முகமது காசிம்,உப்பு தயாரிக்கும் விதம் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.அயோடின் உப்பினை அதிகமாக சேர்த்தால் பாதிப்பு ஒன்றும் கிடையாது,சிறுநீரோடு கலந்து சென்று விடும் என்று கூறினார்.மாணவி தனம் நன்றி கூறினார்.ஆசிரியை முத்து மீனாள் கருத்தரங்கிர்க்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
                                                        படவிளக்கம் :    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் அயோடின் உப்பை பயன்படுத்த நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில்  உப்பு ஆய்வாளர் வாலிநோக்கம் பாரதி மாணவர்களிடம் அயோடின்  உப்பின் அவசியம் குறித்து பேசுகையில் எடுத்த படம்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்,உப்பு ஆய்வாளர் வட்டாணாம் முகமது காசிம் .Displaying Devakottai chairman scholl.jpg

Wednesday 19 February 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவியர் மத்திய இணை அமைச்சர் இ .எம்.சுதர்சன நாச்சியப்பனிடம் இருந்து பரிசு பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேவகோட்டையில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் 50-வது கருத்தொளி இயக்க கண்காட்சி நடைபெற்றது.இதனையொட்டி மாணவர்களக்கு ஓவியம்,பேச்சு,பாட்டு ஆகிய போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டியில் முதல் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள பிரிவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி க.சொர்ணாம்பிகா ஓவிய போட்டியில் முதல் பரிசும்,பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்று வெற்றி பெற்றார்.ஏழாம் வகுப்பு மாணவி எம்.துர்கா பாட்டு போட்டியில் முன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற இரு மாணவிகளுக்கும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இ .எம்.சுதர்சன நாச்சியப்பன் பரிசுகளை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவிகளையும்,பயற்சி அளித்த ஆசிரியை முத்துமீனா ,போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியை வாசுகி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டினார்கள்.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி சி .சொர்ணாம்பிகா மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இ .எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்களிடமிருந்து பரிசு பெற்றபோது எடுத்த படம்.Displaying 19.2.14.cmvschool.pngDisplaying Devakottai 50th Bharat Nirmaan.jpg

Friday 14 February 2014



அன்பு இரண்டு வகைப்படும் மெல்லிய அன்பு -கடின அன்பு என  தன்னம்பிக்கை பயற்சியாளர் நெல்சன் மாணவர்களக்கு   அறிவுரை 

தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை குறித்த கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.அ .காளீஸ்வரி முன்னிலை வகித்தார். 7ம் வகுப்பு மாணவன் நடராஜன் வரவேற்றார்.நெல்சன் மாணவர்களிடம் பேசியதாவது:போராட்டம் என்பதுதான் வாழ்க்கை.அதில் போராடி வெற்றி பெறுபவனே வெற்றியாளன்.தாய் ,தந்தை,ஆசிரியரே கடவுள்.அவர்கள் எண்ணம் போல் வாழ்ந்தால் நம் வாழ்க்கை சிறப்புடன் அமையும்.தன்னம்பிக்கை முக்கியம்.மாணவர்களாகிய நீங்கள் கதை பேசாது,கவனம் சிதறாது,சினிமா,தொலைகாட்சிகள் பார்ப்பதை தவிர்க்கவேண்டும்.வீட்டில் பெற்றோர் பேச்சையும்,பள்ளயில் ஆசிரயர் பேச்சையும் மதித்து நடக்கவேண்டும்.அன்பில் இரண்டு வகை உள்ளது.மெல்லிய அன்பு.கடின அன்பு.நாம் படிக்கும் சமயம் ஆசிரயரும்,பெற்றோரும் அளிப்பது .இந்த இரண்டையும் ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்வது தான் வாழ்க்கை .மாணவர்களாகிய நீங்கள் பொய் சொல்வதை தவிர்க்கவேண்டும்.தவறு செய்வதில் இருந்து தன்னை திருத்திக்கொள்ளவேண்டும்.காதல் இரண்டு வகைப்படும்.ஒன்று இதயகாதல்.மற்றொன்று இச்சைகாதல் . இதயகாதல் நம் பணியில் சிறப்பை காட்டும் .பிரச்சனை இருக்காது.இச்சைகாதல் ஆடம்பர வாழ்க்கையை குறிக்கும்.பல மாய மனிதர்களை தாண்டி தான் நாம் பள்ளிக்கு வருகிறோம்.கனி கொடுக்கும்.கனிகொடுக்கும் தனிமரம் தோப்பாகும்.வாழ்க்கையில் சாதித்தவர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் பெற்றோரையும் ஆசிரியரையும் போற்றி வணங்குபவர்கள் தான் சாதனையாளர்களாக உள்ளனர்.அன்னை தெரசா முதல் அப்துல்கலாம் வரை எண்ணற்ற சாதனையாளர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.ஊனமுற்றவன் மாற்றுதிரனாளி என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.நான்  மாற்று மனிதன்.என்னிடம் ஊனம் என்ற சிந்தனையே  கிடையாது.என்று நெல்சன் பேசினார்.மாணவிகள் சொர்ணம்பிகா ,மங்கையர்க்கரசி,சௌமியா,காயத்ரி,அறபுதுராஜ் ,சண்முகநாதன்,பரமேஸ்வரி,ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு அதற்கு பதில் அறிந்தனர்.8ம் வகுப்பு மாணவன் வல்லரசு நன்றி கூறினார்.

பட விளக்கம்:
0104-தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தன்னம்பிக்கை பயற்சியாளர் நெல்சன் பயற்சி அளித்தபோது எடுத்த படம் உடன் பள்ளி தலைமை ஆசிரயர் லெ .சொக்கலிங்கம் மற்றும் காளீஸ்வரி.
0108:தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தன்னம்பிக்கை பயற்சியாளர் நெல்சன் பயற்சி அளித்தபோது எடுத்த படம்
உடன் காளீஸ்வரி.
0121:தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தன்னம்பிக்கை பயற்சியாளர் நெல்சன் பயற்சி அளித்தபோது 5 ம் வகுப்பு மாணவி கார்த்திகா பேசிய போது  எடுத்த படம் உடன் பள்ளி தலைமை ஆசிரயர் லெ .சொக்கலிங்கம் மற்றும் காளீஸ்வரி.
Displaying IMG_0121.JPGDisplaying IMG_0108.JPGDisplaying IMG_0104.JPG