Tuesday 24 August 2021

 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் 

இணையம் வழியாக அறிவியல் சோதனைகளை செய்து அசத்திய பள்ளி மாணவர்கள் 

வீட்டிலிருந்தபடியே அறிவியல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் 














 

தேவகோட்டை -   தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு மற்றும் அறிவியல் சோதனைகள் செய்வது தொடர்பான போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது.

                                  பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், செல்வமீனாள் , முத்துலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு இணையவழியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் தொடர்பாக பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்கள். மாணவர்கள் ஆர்வமுடன் பங்குபெற்று அறிவியல் சோதனைகளைப் இணையம் வழியாக செய்து காண்பித்து அசத்தினார்கள். இத்தினத்தை முன்னிட்டு அறிவியல் உறுதிமொழியும் வீட்டிலிருந்தபடியே எடுத்துக்கொண்டனர். அறிவியல் மனப்பான்மை தொடர்பாக பல்வேறு மாணவர்கள் பேசியும் அசத்தினார்கள். பங்கு பெற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது .

படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழியாக தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தை முன்னிட்டு  ஓவியம் , பேச்சு  மற்றும் அறிவியல் சோதனைகள் செய்து காண்பித்தல்  தொடர்பான போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர் இணையம் வழியாக மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்கள்.

 

 

மாணவர்களின் அறிவியல் சோதனைகள்,அறிவியல் தொடர்பான உரை - வீடியோ 

 https://www.youtube.com/watch?v=hOrwsR73ZSc

 https://www.youtube.com/watch?v=ATpMJTbMaG4

 https://www.youtube.com/watch?v=C7H47OyMGKw

 https://www.youtube.com/watch?v=udoaP-2AIyI

 

 

 

No comments:

Post a Comment