Friday 31 January 2014

எறும்புகள் பேசுவதில்லை,செயலில்தான் காட்டும்

எறும்புகள் பேசுவதில்லை,செயலில்தான் காட்டும் என மனிதவள மேம்பாட்டு பயற்சியாளர் லெ .நாராயணன் தெரிவித்தார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் வாழ்க்கையில் வெற்றி பெற என்ற தலைப்பில் மனிதவள மேம்பாடு கலந்துரையாடல் பயிற்சி நடைபெற்றது.
பயற்சியில் நான்காம் வகுப்பு மாணவி அபிராமி அனைவரையும் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .கவிஞர் லயன் வி.பழனியப்பன் முன்னிலை வகித்தார்.உலகம்பட்டி                 லெ .நாராயணன் மனித வள மேம்பாடு குறித்து மாணவ,மாணவியர்க்கு பயற்சி அளித்து பேசுகையில்,ஏழு  விசயங்களை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளாக எடுத்துரைத்தார்.மனப்பான்மை,பழகும் தன்மை,பேச்சுக்கலை ,நேரப் பகிர்வு ,உற்சாகம் ,தன்னம்பிக்கை ஆகியவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துமாறு கேட்டுகொண்டார்.கோழி பண்ணையில் பண்ணையாள் உள்ளே நுழையும்போது நிறைய கோழிகள் சட்டென தலையை தூக்கும் .அனால் நோய்வாய் பட்ட கோழிகள் மட்டும் தலையை குனிந்து குறுக்கி கொள்ளும்.நீங்கள் வாழ்க்கையில் உற்சாகமாக இருந்து வெற்றி பெறுங்கள்.
உங்களுடைய பெயருக்கு பின்னால் (இ.ஆ.ப.,எம்.பி .பி .எஸ்.,இ .வ.ப .,)என ஏதாவது ஒரு அடைமொழியை வைத்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்."எறும்புகள் பேசுவதில்லை" என்றால் அவை சுறுசுறுப்பாக இயங்கும்.வரிசையாக செல்லும்.தன்னைவிட இரண்டு மடங்கு கனமுள்ள பொருள்களை கூட துக்கி செல்லும்.வரிசையாக செல்வதை களைத்து விட்டால் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வரிசையாக செல்ல ஆரம்பித்து விடும்.அவற்றை யாரும் மேற்பார்வையிடுவதில்லை.தங்கள் வேலையை தாங்களே செய்துமுடிக்கும்.அவற்றை போன்று நீங்களும் வாழ்க்கையில் சுறுசுறுப்புடன் இருந்து வெற்றிபெறுங்கள் என தனது வாழ்க்கை அனுபவத்தை அழகாக எடுத்துக் கூறி மாணவர்களை உற்சாகப்  படுத்தினார் .பயிர்சியில் சொர்ணாம்பிகா,பரமேஸ்வரி,சன்முகப்ரகாஷ்,நடராஜன் ஆகிய மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில்களை பெற்றனர்.பயற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்திருந்தார்.மூன்றாம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் 
மனிதவள மேம்பாட்டு பயற்சியாளர் லெ .நாராயணன் பயற்சி அளித்தபோது எடுத்த படம்.உடன் கவிஞர் லயன் பழனியப்பன்,பள்ளி தலைமை ஆசிரியர்     லெ .சொக்கலிங்கம் Displaying IMG_0051.JPGDisplaying IMG_0068.JPGDisplaying IMG_0069.JPG

Friday 24 January 2014

மாணர்வகள்  அம்மா,அப்பாவிடம் கூறி வாக்களிக்க சொல்லுங்கள் என தேவக்கோட்டை கோட்டாட்சியர்  கணேசன் தெரிவித்தார்.
தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் கலந்துகொண்டோரை பள்ளியின் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை கோட்டாட்சியர் (ஆர் .டி.ஒ ) கணேசன் தலைமை தாங்கி பேசுகையில்,மாணவர்களாகிய நீங்கள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்க உள்ளீர்கள்.நீங்கள் பெரியவர்களான பிறகு  கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.அதற்க்காகத்தான் நமது அரசு தேசிய வாக்காளர் தினத்தை பள்ளிகளில் கொண்டாடுகிறது.நீங்கள் அனைவரும் உங்கள் அப்பா,அம்மாவிடம் சொல்லி கட்டாயம் வாக்களிக்க சொல்லுங்கள் என அறிவுரை வழங்கினார் .சிறப்பாக நடைபெறும் இப்பள்ளியில் படிக்கும் 6ம் வகுப்பு மாணவ,மாணவியர்க்கு ஆங்கில அகராதி அவர் வழங்குவதாகவும் தெரிவித்தார்.விழாவில் தேவகோட்டை வட்டாட்சியர் கயல்விழி,துணை -வட்டாட்சியர் தேர்தல் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு உத்தரவின்படி வாக்களிப்பது எனது உரிமை,எனது கடமை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியமான பங்கு வாக்காளர்களே என்கிற தலைப்புகளில் ரங்கோலி போட்டி,கட்டுரை போட்டி,ஓவிய போட்டி,பேச்சு போட்டிகள் நடைபெற்றன்.தேவகோட்டை கோட்டாட்சியர் கணேசன் மற்றும் தேவக்கோட்டை வட்டடாட்சியர் கயல்விழி ஆகியோர் ரங்கோலி போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளில் முதல்,இரண்டாம் பரிசுக்குரியவர்களை தேர்ந்து எடுத்தனர்.6-8 வகுப்பு பிரிவில் ரங்கோலி போட்டியில் முதல் பரிசை பவனாவும் ,கட்டுரை போட்டியில் முதல் பரிசை சொர்ணம்பிகாவும்,ஓவிய போட்டியில் முதல் பரிசை ராம்குமாரும்,பேச்சு போட்டியில் முதல் பரிசை நடராஜனும் வெற்றி பெற்றனர்.6-8 வகுப்பு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோட்டாட்சியர் கணேசனும்,3-5 வகுப்பு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்குளுக்கு வட்டாட்சியர் கயல்விழியும் ,1-2 வகுப்பு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்குளுக்கு துணை வட்டாட்சியர் ஜேம்சும் பரிசுகளை வழங்கினர்.
தேவக்கோட்டை கோட்டாட்சியர் கணேசன் தேர்தல் வாக்களர் உறுதிமொழி கூர அனைத்து மாணவ-மாணவியரும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .விழாவில் திரளான பெற்றோரும் கலந்துகொண்டனர்.நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.
பட விளக்கம்;தேவக்கோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளயில் கோட்டட்சியர கணேசன் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மாணவர்களுடன் எடுத்துகொண்டபோது எடுத்த படம்.அருகில் வட்டாட்சியர் கயல்விழி ,துணை வட்டாட்சியர் ஜேம்ஸ் ,பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.

Monday 13 January 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.