Monday 9 August 2021

ஹிரோஷிமா நாகசாகி தினம் 

இணைய வழியாக மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டிகள் 

வெள்ளை தாளில் கொக்கு செய்து சமாதானத்தை வேண்டிய பள்ளி மாணவர்கள்

 

























 உலகினை அளித்திடும் யுத்தமே வேண்டாம் 

வேண்டும் சமாதானம் -  என்றும் 

வேண்டும் சமாதானம் - எங்கும் வேண்டும் சமாதானம் 

கவிதை மூலமாக சமாதானத்தை வேண்டிய மாணவர்கள் 


 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இணையம் வழியாக ஹிரோஷிமா நாகசாகி தின போட்டிகள் நடைபெற்றது.

             பள்ளி மாணவர்களுக்கு போரின் பிடியில் பிஞ்சுகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும்,  இதுபோல் துயரம் இனிமேல் வேண்டாம், அன்னை பூமியில் அமைதி தவழும், அணுஆயுத போட்டியும் மானுடத்தின் தலைகுனியும் என்ற தலைப்புகளில் கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது. கொரோனா காலமாக இருப்பதால் இணைய வழியாக மாணவர்கள் கவிதைகளையும், ஓவியங்களையும் அனுப்பினார்கள். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், செல்வ மீனாள் ,  முத்துலட்சுமி ஆகியோர் ஊக்கப்படுத்தினார்கள் . இணையம்  வாயிலாக மாணவர்கள்  இப்பூமியை அனைத்து மக்களுக்கான சொர்க்கமாக மாற்ற முடியும் என்பதை நான் அறிவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். பல மாணவர்கள் சமாதானத்தை வேண்டி பறக்கும் கொக்கை காகிதத்தில் செய்து அசத்தினார்கள் . சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இப்பூமியை அனைத்து மக்களுக்கான சொர்க்கமாக மாற்ற முடியும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்,  நானும் அறிவேன்.அனைவரும்  அணு ஆயுதத்தை தவிர்ப்போம் என உறுதிமொழியையும் மாணவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

 

 படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஹிரோஷிமா நாகசாகி தினத்தையொட்டி ஓவியம் மற்றும் கவிதை , பேச்சுப் போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது. இப்[போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெற்று , வேண்டும் சமாதானம் - என்றும் வேண்டும் -  எங்கும் சமாதானம் என்கிற பாடலையும், காகிதத்தில் சமாதானத்தை வேண்டி பறக்கும் கொக்குகளையும் செய்து அசத்தினார்கள்.  பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், செல்வ மீனாள், முத்துலட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

 

வீடியோ : கொக்கு செய்து அசத்தும் மாணவர்கள் 

https://www.youtube.com/watch?v=IZHGxQyP0aA

 

 

வேண்டும் சமாதானம் -  என்றும் 

வேண்டும் சமாதானம் - எங்கும் வேண்டும் சமாதானம் பாடலை பாடும் மாணவிகள் வீடியோ 

https://www.youtube.com/watch?v=P0gqIWyRyIk

https://www.youtube.com/watch?v=-SF39TVzBOM


No comments:

Post a Comment