Wednesday 4 August 2021

கூகுள் மீட் வழியாக பாடம் நடத்துவது எப்படி? 

இணைய வழி கல்வியை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தொடர்பாக பள்ளி  ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியர் கலந்துரையாடல் 

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஈமெயில் உருவாக்கி கொடுத்து கூகுள் மீட்டையும் டவுன்லோட் செய்து கொடுத்த ஆசிரியர்கள் 









தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி  ஆசிரியர்களுக்கு இணையம் வழியாக பாடம் நடத்துவது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

                                     கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு பள்ளியிலிருந்தே மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பாட ஒப்படைப்புகளை திருத்தி கொடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் இணையம் வழியாக கூகுள் மீட்டை பயன்படுத்தி பாடம் கற்பிப்பது எவ்வாறு என்பது  தொடர்பாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆசிரியர்களுடன்  கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது கூகுள் மீட் ஆப்பை டவுன்லோடு செய்வது தொடர்பாகவும், இமெயில் இல்லாத மாணவர்களுக்கு இமெயிலை உருவாக்குவது தொடர்பாகவும்  விழிப்புணர்வு ஏற்படுத்த சில தரவுகளை  எளிமையாக்கி  மாணவர்களுக்கு இணையம் வழியாக,  வாட்ஸ்அப் வழியாக அனுப்புவது குறித்து விளக்கப்பட்டது. மேலும் போன் வழியாகவும் தொடர்பு கொண்டு மாணவர்களிடம் பேசினார்கள். இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் ஒரு சிலரிடம் மட்டுமே ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ளது. அவ்வாறு  ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ள ஒரு சில மாணவர்களையும் ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பார்த்து ஈமெயில் உருவாக்கிக் கொடுத்து, கூகுள் மீட்டையும் டவுன்லோட் செய்து கொடுத்தார்கள் . மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் கூகுள் மீட்டு வழியாக பாடம் கற்பிக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆசிரியர்களும் ஆர்வத்துடன் மாணவர்களுக்கு தொலைபேசி வழியாகவும், நேரிலும் மாணவர்களை வீடுகளுக்கே சென்று பார்த்து கூகுள் மீட் டவுன்லோட் செய்வது , கல்வி தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்பது , பாட ஒப்படைப்பு செய்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் , செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.

 படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி ,முத்துமீனாள், செல்வ மீனாள்  ஆகியோர் மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று  சந்தித்து கூகுள்  மீட் ஆப்பை டவுன்லோடு செய்வது தொடர்பாகவும், இமெயில் உருவாக்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பள்ளி தலைமையாசிரியர்  இணையம் வழியாக மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது தொடர்பாக சக ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

No comments:

Post a Comment