Saturday 31 October 2015

                                        தேசிய ஒருமைப்பாட்டு தின விழா 

தேவகோட்டை- தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

Thursday 29 October 2015

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி  முதலாம் ஆண்டு நிறைவு  பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி 

இந்நிகழ்வினை வெள்ளிகிழமை ( 30/10/2015),சனிகிழமை (31/10/2015),ஞாயிறு(1/11/2015) மூன்று நாட்களும் மாலை 6.30 மணி முதல் 7.00 மணி காணுங்கள்
தினமலர்  பத்திரிக்கை பள்ளி அளவில் நடத்திய   போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்

Tuesday 27 October 2015

மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு  வெற்றி  பரிசாக  ரூபாய் 5,000 பணமும்,சான்றிதழும்   பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி 

அன்பின் சொக்கலிங்கம் சார் 

நேற்று காலையில் சங்கரன் கோவிலில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்கையில், காலை 5 30 மணி முதல் முயற்சி செய்து 6 மணிக்கு செய்தித் தாள் கிடைத்ததும் காரைக்குடி தமிழ் இந்து வாசகர் திருவிழாவில் உங்கள் பள்ளிக்கூடத்தின் பெயர் இருக்கிறதா என்றுதான் முதலில் தேடிப் பார்த்தேன்...
ஆனால் எனக்கு விடை இன்றைய தமிழ் இந்துவில் எதிர்பாராத இடத்தில் பதில் இருந்தது....வாசகர் கடிதங்கள் இடம்பெறும், இப்படிக்கு இவர்கள் பகுதியில்!  ஆஹா...பள்ளிக் குழந்தைகள் பெயரோடு!

வாழ்த்துக்கள் சார்...உங்கள் இடையறாத ஊக்கத்திற்கு! அந்த அன்பர் திருப்பத்தூர் ராமநாதன் அவர்களுக்கும்!

எஸ் வி வேணுகோபாலன் 




Published: October 27, 2015 11:16 ISTUpdated: October 27, 2015 11:16 IST

ஆர்வம் கொண்ட அந்த மாணவர்கள்!

COMMENT   ·   PRINT   ·   T+  
கடந்த ஞாயிறு அன்று காரைக்குடியில் நடைபெற்ற வாசகர் திருவிழாவில் பங்கேற்ற என் கவனத்தை ஈர்த்தார்கள் - பார்வையாளர்கள் வரிசையில் துறுதுறுவென அமர்ந்திருந்த பள்ளிச் சிறுவர்கள் 11 பேர்.
அவர்கள் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் வகுப்புக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஜெயஸ்ரீ, வெங்கட்ராமன், ஜனஸ்ரீ, அய்யப்பன், கார்த்திகேயன், உமாமகேஸ்வரி ஆகியோரும், ஏழாம் வகுப்பு சார்பில் பரமேஸ்வரி, ராமேஸ்வரி, எட்டாம் வகுப்பு சார்பில் தனம், பூவதி, கண்ணதாசன் என அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
தங்களது கதை, ஓவியங்களை ‘தி இந்து’வின் மாயாபஜார் இணைப்பிதழில் வெளியிட்டு ஊக்கப்படுத்திவருவதால், வாசகர் திருவிழாவுக்கு உற்சாகமாகக் கிளம்பிவந்ததாக அந்தக் குழந்தைகள் சொன்னபோது வியப்பாக இருந்தது.
பாடத்துக்கு வெளியே சென்று பொது விஷயங்களைப் பற்றி மாணவர்களுடன் பேச ’தி இந்து’ தமிழ் நாளிதழ் உதவிபுரிவதாகச் சொன்னார் அவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியை கலாவதி. இவர்களுடன் ஒரு குழந்தையின் தாய் சித்ரா, மற்றொரு குழந்தையின் பாட்டி சீதாலட்சுமி ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தது என்னை நெகிழவைத்தது.
ராமநாதன், திருப்பத்தூர்.

Friday 23 October 2015

 தஞ்சாவூர் மாவட்டம் திருகருகாவூரில் பாடலாசிரியர் அறிவுமதி கலாம் அவர்களின் நினைவாக அக்னி சிறகுகள்  அறகட்டளை என்ற அமைப்பின் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கினார்.ஏற்புரை வழங்கும்போது எடுத்த படம்.






Thursday 22 October 2015

 நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை
தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை நடைப் பெற்றது.

Monday 19 October 2015

எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா 

   தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் தொடர்பான செய்தி தொகுப்பு நியூஸ் 7 தமிழ் தொலைக்கட்சியில் காணுங்கள் 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் பேச்சு போட்டியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு  வெற்றி பெற்றது தொடர்பான செய்தியையும் , பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பான செய்தி தொகுப்பையும் இன்று இரவு 11 மணி முதல் 11.30 மணிக்குள்ளும் , நாளை 20/10/2015 செவ்வாய் கிழமை மதியம் 2மணி முதல் 2.30 மணிக்குள்ளும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள்.   லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.நன்றி 

http://ns7.tv/ta

Sunday 18 October 2015

தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி 


நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி  1ம் ஆண்டு நிறைவு  பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி 

Saturday 17 October 2015

 நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சேனலில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று பகல் 12 மணி 

Friday 16 October 2015

 தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2015  விழா- எனது நன்றிகள்

தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2015  விழா நடைபெறும் இடம் மதுரை.விருது பெறுபவருக்கு மட்டுமே அனுமதி என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு தினமலர் பத்திரிக்கையில் வெளியான உடன் அன்று காலை முதல் எனக்கு அறிமுகம் இல்லாத  மற்றும் அறிமுகமான என் மீது அன்பு கொண்ட அதிகமானோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். திருப்பத்தூர் ஓய்வு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சுப்பையா ,தேவகோட்டை ராம் நகர் ஜெய பிரபகரன்பண்டியன், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  ஆசிரியை முத்து மீனாள் ,தேவகோட்டை கருவுல அலுவலர் திரு.முருகன்,திருப்பத்தூர் ஓய்வு AEO  திரு.ரெங்கசாமி ,தேவகோட்டை ABDO திரு.குமார்,கல்வித்துறை ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அலுவலர் திரு.நாகசுந்தரம்,எனது நண்பர் விருதுநகர் திரு செந்தில்,மானமதுரை ஆசிரியை மீனாட்சி நடராஜன்,தேவகோட்டை NSMVPS தமிழ் ஆசிரியர் ஓய்வு திரு.சண்முகநாதன்,தேவகோட்டை வைரம் சுவாமிநாதன் செட்டியார்,TNSF மாவட்ட செயலாளர் திரு.ஜீவா ,தேவகோட்டை அரவிந்த் ஸ்நாக்ஸ் ஆச்சி அவர்கள்,ராமநாதபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்,தேவகோட்டை சன்மார்க்க சங்கம் செயலர் ,தேவகோட்டை போஸ்ட் மேன் ( எங்கள் பள்ளி பகுதி )திரு.ராஜேந்திரன்,காரைக்குடி ரயில்வே அதிகரி திரு.சந்திர சேகர்,திண்டுக்கல் ஆசிரியர் ஏங்கல்ஸ் ,புளியால் பள்ளி ஆசிரியர் சேவியர்,தேவகோட்டை டி பிரிடோ ஆசிரியர்கள் ப்ரைட்,ஜெயசீலன்,சுப்ரமணியன் திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் திரு.ஸ்ரீதர் ராவ்,குழிபிறை முன்னாள் தலைமை ஆசிரியர் பால  கிருஷ்ணன்,கீழசிவல்பட்டி உறவினர் திரு.அழகப்பன்,(இவர்கள் அனைவரும் தொலைபேசி வாயிலாக ) ஆகியோருக்கும்,முக நூல் ,வாட்சப் ,மெசேஜ் வாயிலாகவும் எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும்,தற்போது வாழ்த்து சொல்லி வருபவர்களுக்கும் ,like கொடுப்பவர்களுக்கும்,  விருது கிடைக்க காரணமான அனைவருக்கும் எனது நன்றி.

Thursday 15 October 2015

 அகில இந்திய வானொலியான 

கோடை பண்பலை வானொலியில் அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நேரடி ஒலிபரப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள மாணவர்கள் பங்கேற்பு 


Tuesday 13 October 2015

               நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சி பட்டறை

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சிப் பட்டறை நடைபெற்றது.

Friday 9 October 2015

                              பகிர்தலில் மனமகிழ்வு வாரவிழா 

தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துதல்

                                தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தீயினால் பாதிக்கப்பட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய பகுதிக்கு சென்று பகிர்தலில் மனமகிழ்வு வார விழா கொண்டாடினர்.

Thursday 8 October 2015

          பரிசு வழங்கும் விழா 
 
                              
                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள தேசிய  போட்டிக்கு மாணவர்களை  பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.போட்டியில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
                               

Sunday 4 October 2015


எல் . ஐ.சி .போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா 

                                     தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு   பாராட்டு விழ நடை பெற்றது.

Friday 2 October 2015

தினமலர் - இலட்சிய அசிரியர் 2015 விருது பெற்ற உங்களுக்கு
 என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க வளர்க
 !

அன்புடன்
கரு.அண்ணாமலை
 

Thursday 1 October 2015

தி இந்து தமிழ் பத்திரிக்கை பள்ளி அளவில் நடத்திய   போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்