Monday 2 August 2021

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை 

வீட்டுப்பாடங்களை பெற்றோர் பள்ளியில் வந்து திருத்தி சென்றனர் 




 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  கல்வித் தொலைக்காட்சி வாயிலாக  கற்றுக்கொண்டு செய்யும் வீட்டுப்பாடங்களை  பெற்றோர்கள் பள்ளியில் வந்து திருத்தி கொண்டு சென்றனர்.

                        கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே தற்பொழுது துவங்கியுள்ள புதிய கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாக பணிகளுக்காக மட்டும் குறிப்பிட்ட அளவு ஆசிரியர்கள் வருகையுடன் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வரும் இன்று முதல் 100% வருகையுடன் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டதை தொடர்ந்து பள்ளிக்கு அனைத்து ஆசிரியர்களும் வருகை புரிந்தனர்.  மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்த்து செய்த பாட ஒப்படைப்புகளை பெற்றோர்கள் பள்ளியில் வந்து திருத்தி செல்ல வேண்டும் என்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் வீடு,வீடாக நேரில் சென்று மாணவர்களை வீட்டுப்பாடம்  செய்ய வலியுறுத்தினார்கள்.பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் மாணவர்களிடம் இணைய வசதி மற்றும் ஆண்ட்ராய்டு போன் இல்லாததால் கல்வி தொலைக்காட்சியை மட்டுமே பார்த்து படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மாணவர்களின் வீட்டுப்பாடங்களை பெற்றோர்கள் பள்ளிக்கே வந்து பரவலாக்கப்பட்ட முறையில் ஆசிரியர்களிடம் திருத்தி கொண்டு சென்றனர்.இன்று பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆசிரியர்கள் அனைவருக்கும் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகளை குறித்து எடுத்துக்கூறினார்.மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு  ஏற்படுத்தி  வரும் இப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள்  பாராட்டு தெரிவித்தனர்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  கல்வித் தொலைக்காட்சி வாயிலாக  கற்றுக்கொண்டு செய்யும் வீட்டுப்பாடங்களை  பெற்றோர்கள் பள்ளியில் வந்து திருத்தி கொண்டு சென்றனர்.இன்று முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்தனர் .

No comments:

Post a Comment