Wednesday 1 September 2021

 எல்.ஐ.சி.யின் நிறுவன நாள் விழா 

 நாட்டின் கடைகோடி கிராமத்தில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைந்துள்ள எல்.ஐ.சி.நிகழ்வில் பங்கேற்ற இனிமையான தருணம்

  பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் நிறுவன நாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மறக்கமுடியாத  நிகழ்வு 

 

                         பொதுத்துறை நிறுவனங்களில் உலகத்திலேயே மிகப்பெரிய தன்னிகரற்ற நிறுவனமான எல்ஐசியின் தேவகோட்டை கிளையில் மேலாளர்  சுரேஷ் அவர்கள் அழைப்பின்பேரில் 65 ஆண்டுகள் நிறைவு பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் எல்ஐசியின் நிறுவன நாள் விழாவில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தேன்.






















































மேலாளர் அவர்கள் எங்கள் பள்ளி தொடர்பாகவும், பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பாகவும், எல்ஐசியின் வளர்ச்சி தொடர்பாகவும், உலகிலேயே மிகப்பெரியகாப்பீடு  நிறுவனமாகவும், பல கோடி வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகவும்,  5 கோடியில் ஆரம்பித்து பல லட்சம் கோடிகளை சுமார்  32 லட்சம் கோடிகளை இன்று  தன்னகத்தே கொண்டுள்ள மிகப் பெரிய வளர்ந்த நிறுவனமாகவும், மக்களின் பணம் மக்களின் சேவைக்காகவே என்கிற  நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு இன்று நமது நாட்டின் மிகப்பெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் எல்ஐசியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்ற போது எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. எல்.ஐ.சி.யின் வளர்ச்சிக்கு அனைத்து  முகவர்களும், அலுவலர்களும், பணியாளர்களும் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றிகரமான நிறுவனமாக வளர்ந்து எடுத்துள்ளார்கள் என்பதே உண்மை.


                        தேவகோட்டை கிளையின் மூத்த முகவர் ரவீந்திரநாதன் 49 ஆண்டுகள் முகவராக  தொடர்ந்து இருந்து வந்து அடுத்த ஆண்டு பொன் விழா கொண்டாட இருக்கிறார்கள் என்கிற தகவலை மேலாளர் சுரேஷ் த கூறும்போது  மிகவும் மகிழ்வாக இருந்தது. மூத்தமுகவர்  ரவீந்திர நாதன் அவர்கள் பேசும்பொழுது எல்ஐசியின் வளர்ச்சி தொடர்பாக மிக அருமையாக எடுத்துரைத்தார். அந்த காலத்தில் எப்படி எல்லாம் சிரமப்பட்டு எல்ஐசியினை வளர்த்தோம் என்கிற தகவலையும் விரிவாக விளக்கினார் .ஆசிரியர்களுக்கு போராட்ட காலத்தில் சம்பளம் இல்லாதபோது  எஸ் எஸ் என்கிற வாய்ப்பை பயன்படுத்தி எல்ஐசியில்  இருந்து பணம் பெற்று கொடுத்த நிகழ்வையும் பகிர்ந்து கொண்டார் .மறக்க முடியாத இந்த நிகழ்வு அவர் கூறும்போது எங்களுக்கு அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. முகவர்  முத்துசாமி அவர்களும் பல்வேறு பழைய நினைவுகளை   எடுத்துக் கூறினார். எவ்வாறெல்லாம் எல்.ஐ.சி.யை வளர்ப்பதற்கு அந்த காலத்தில் எவ்வளவு சிரமப்பட்டோம், 12 ரூபாய் பிரீமியம் பெறுவதற்கு எத்தனை முறை சென்றுள்ளோம் என்கிற தகவலை எல்லாம் எடுத்துக் கூறினார். எல்ஐசி ஏஜென்ட் என்றாலே பல பேர் அந்த காலத்தில் எவ்வாறெல்லாம் உதவினார்கள் என்பதை   மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார் . ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. கொரோனோவிற்கு  பிறகு மிகவும் அதிக அளவில் அனைவரும் எல்ஐசி நோக்கி வருகிறார்கள் என்கிற இருக்கிற நம்பிக்கையான விஷயத்தையும் எடுத்துக் கூறினார். தோழர்களே  5 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் இன்று 32 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது .அதற்கு காரணம் அங்கு உள்ள முகவர்கள், அலுவலர்கள் , பணியாளர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிக மிக கடுமையான முறையில் மக்களுக்கு உதவக்கூடிய வகையில் இருக்கின்றது. எத்தனையோ தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வந்த பொழுதும் , காப்பீடு தொகையை முழுவதுமாக 99.9% கொடுக்கக்கூடிய ஒரே நிறுவனம் எல்ஐசி மட்டும்தான் என்பதை கூறிக்கொள்வதில்  பெருமையாக இருக்கின்றது. இந்த அருமையான தருணத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நிகழ்வில்  மூத்த முகவர்கள்  ரவீந்திர நாதன், முத்துசாமி , மூத்த  அலுவலர் சுந்தர் ,  மிகச்சிறந்த முறையில் தற்போது பணியாற்றி வரும் முகவர் தயாநிதி ,வாடிக்கையாளர் ஹென்றி ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.அருமையான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தேவகோட்டை கிளை மேலாளர் சுரேஷ், உதவி மேலாளர் திலீப்  மற்றும் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும், பணியாளர்களுக்கும், முகவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 நன்றி! நன்றி! நன்றி !

தோழமையுடன்

லெ .சொக்கலிங்கம்,

 தலைமையாசிரியர் ,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

 தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment