Saturday 30 May 2015

சுட்டி விகடன் 31/05/2015 இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் பங்களிப்பு


 தேவகோட்டை யில் பள்ளி  மாணவர் சேர்க்கை  விழிப்புணர்வு முகாம்

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Sunday 24 May 2015

                    வடகாஞ்சேரி ஹோட்டல் உணவு மற்றும் பீச்சி டேம்
திருச்சூர் அருகே உள்ள வடகஞ்சேரியில் உள்ள ஹோடேலில் மதிய உணவாக டிபன் சாப்பிட்டோம்.நன்றாக இருந்தது.பிறகு மீண்டும் அங்கிருந்து கிளம்பி பீச்சி டேம் சென்றோம்.மிகபெரிய டேம்.சூப்பர்.மலர்கள் அருமை.பார்க் அருமை.எல்லாமே சூப்பர்.

                                          திருச்சூர் வாழினி டேம்

திருச்சூர் அருகில் உள்ள வாழினி டேம் சூப்பர்.அருமையான பார்க் உள்ளது.சூப்பர் பகுதி.

                                                   திருச்சூர் செப்பார கேவ்ஸ்
திருச்சூர் பூமாலா டாமில் இருந்து நேராக செப்பார கேவ்ஸ் என்கிற இடத்திருக்கு சென்றோம்.அங்கு அருமையான பச்சை பசேல் என்கிற இடம் மேலே உள்ளது.நாங்கள் கூட மலை உச்சிக்கு ஏற தயங்கினோம்.ஆனால் அந்த வழியாக சென்ற ஒருவர் எப்படி வலுக்குவது போல் உள்ள பாறை மேல் ஏறுவது என்கிற விவரத்தினை சொல்லி எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஏற சொன்னார்.மேல ஏறினால் அருமையான இடம். சூப்பர் காற்று.

                                            திருச்சூர்  பூமாலா  டம்

திருச்சூர் விவ் பாயிண்ட் இடத்தில் இரூந்து திரும்பி ஹோட்டல் ஆரியாவில் டி சாப்பிட்டோம்.நன்றாக இருந்தது.அங்கிருந்து பூமாலா  டம் சென்றோம்.அருமையான இடம்.

நண்பர்களே ,சமீபத்தில் முகநூல் நண்பர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டுதல் உதவியால் திருச்சூர் மற்றும் கொச்சின் சுற்றி பார்ப்பதற்கு காரைக்குடி திரு.சீனிவாசன் அவர்களும் குடும்பத்தாரும் (திருச்சூரில் வசிப்பவர்கள்)முழு அளவில் உதவி செய்தனர்.அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

                                             திருச்சூர் விளாங்கன விவ் பாயிண்ட்

திருச்சூரில் இருந்து விளங்கன விவ் பாயிண்ட் என்ற இடத்தில் இருந்து திருச்சூர் நகரத்தை சுற்றி பார்க்கலாம்.சூப்பர் இடம்.மலை மீது உள்ளது.



Saturday 23 May 2015

    தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு 

Thursday 14 May 2015


     சுட்டி விகடன் 15/05/2015 இதழில் வெளியான சுட்டி கிரியேசன்ஸ் பகுதியை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் செய்தபோது எடுத்த படம்
வண்டி பெரியார் பகுதியில் இருந்து குமிளி வரும் வழியில் உள்ள தேயிலை தோட்ட காட்சிகள்

Wednesday 13 May 2015

                                   வாகமனில் குகைக்குள் பயணம்

வாகமன் அருவியில் இருந்து வாகமன் சிட்டிக்கு வரும்போது மலையை குடைந்து தார் சாலை அமைத்து உள்ளனர்.நமக்கு குகைக்குள் செல்வது போலவே உள்ளது.அருமையான பயணம்.

                                                           வாகமன் போட்டிங்

                                   வாகமன் சிட்டியின் நடுவே தனியார் தேயிலை தோட்டத்தின் நடுவே ஏரி அமைந்துள்ளது.அதனில் போட்டிங் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 50 வீதம் படகில் துடுப்பு போட்டும்,காலால் மிதித்தும் செல்லலாம்.அருமையான இடம்.மாலை நேரத்தில் சென்றால் மிஸ்ட் உடன் செல்வதே அருமை.

                                                                    வாகமன் அருவி 
                      வாகமன் அருகே உள்ள அருமயான அருவி உள்ளது.ஆனால் இதனை தூரத்தில் இருந்து தான் ரசிக்க முடியும்.ஏனெனில் இது PRIVATE PROPERTY.ஒரு அருவியே பிரைவேட் ப்ரபெர்டியாக உள்ளது.எனவே தூரத்தில் இருந்துதான் ரசிக்க முடியும்.ஆனாலும் அருமையான அருவி.கொள்ளை அழகு.


Tuesday 12 May 2015

                                                         வாகமன் பைன் பாரெஸ்ட்


                                               வாகமன் மெடோஸ் செல்லும் வழியில் அருமையான தேயிலை தோட்ட காட்சிகள் 



                                                            வாகமன் மெடோஸ் 
                     குமிளியையை அடுத்துள்ள பருந்தன் பாறை பார்த்துவிட்டு அடுத்ததாக வண்டி பெரியார் வழியாக வாகமன் ஊருக்கு செல்லும் முன்பாக மெடோஸ் அதாவது புல் தரையை மேடு,இறக்கம் என அருமையாக உள்ளது.சிறு,சிறு குன்றுகளாக அமைந்துள்ளது.அதன் உள்ளே வாகனத்தில் சென்றால் கிரீன் வேல்லி அமைந்துள்ளது.உள்ளே செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 10,வாகனம் ஒன்றுக்கு ரூபாய் 50. பார்க்க வேண்டிய இடம் .சூப்பர். இங்கு பிப்ரவுரி மாதத்தில் மட்டும் பாரசூட்டில் பறக்கலாம்.

                                                                 பருந்தன் பாறை            
 குமிளியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பருந்தன் பாறை பார்க்க வேண்டிய இடங்கள்.

                                                         பட்டுமலை சர்ச்

          குமிளியில் இருந்து பருந்தன் பாறை என்னும் சுற்றுலா பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள  தேயிலை தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள புகழ் பெற்ற பட்டுமலை சர்ச்


                                                      

Monday 11 May 2015

                                                                  கதகளி காட்சி

                                                                 களரி சண்டை

                                                          தேக்கடி போட்டிங்

                        தேக்கடியில் போடிங் செல்வதற்கு பெரியார் பவுண்டேசன் என்கிற ஆன்லைன் வழியாக சென்று டிக்கெட் புக் செய்தோம்.மாலை 3.30 மணி அளவில் சென்றதால் மான்களின் கூட்டம்,காட்டு மாடுகளின் கூட்டம்,யானைகளின் கூட்டம் என அறிய காட்சிகள் காண கிடைத்தது.



                                                   
                                                        ஒட்டக தளமேடு

             குமிளி அருகில் உள்ள   பகுதியில் அருமயான கிளைமேட் உள்ளது.



                                                          
                                                           Y அருவி
குமிளி அருகில் உள்ள செல்லார் கோவில் பகுதியில் உள்ள Y அருவி நீர்விழ்ச்சி மிகவும் பயங்கராமான ஆழத்துடன் உள்ளது.பார்த்து ரசிக்க வேண்டிய இடம்.

                                                    

Sunday 10 May 2015

குமுளி ,தேக்கடி,வண்டி பெரியார்,வாகமன் அவற்றை சுற்றி உள்ள சுற்றுலா தலங்கள்

முதலில் ராமக்கல் மேடு, குறவன் குறத்தி சிலை படங்கள் பார்ப்போம்

Monday 4 May 2015

                   
                 மகாகுருவின் ஆசிரியர்களுக்கான பயற்சி


                                              கடந்த வாரத்தில் விருதுநகர்  இதயம் முத்து அண்ணாச்சி அவர்களின் ஆர்வத்துடன் ஜே சி இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம்  சார்பாக ஜே சி இயக்கத்தின் மகாகுரு பயற்சியாளர் திரு.R.பஞ்சநாதன் அவர்கள் சுமார் 40 ஆசிரியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக (மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று) விருதுநகரில்  தொடர்ந்து நடத்தி வரும் பயற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றேன்.11வாது மாதமாக இந்த மாதம் நடைபெற்ற பயிற்சியின் தலைப்பு "நான் தான் அந்த ஆசிரியர் "பயிற்சியின் மூலமாக நிறைய தகவல்களை பெற்று கொண்டேன்.புதிய தகவல்களை நிறைய கேட்டுக்கொண்டேன்.பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் நிறைய விஷயங்கள் புதிதாக கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.இதயம் முத்து அண்ணாச்சி உட்பட நிர்வாகிகள் அனைவரும் பயிற்சியின் நிறைவு வரை அங்கேயே அமர்ந்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது.அவர்கள் அனைவரும் முழுவதுமாக பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.முத்து அண்ணாச்சி அவர்கள் பேசும்போது  மண்டலம் 18ல் உள்ள ஜே சி பயிற்சியாளர்கள் சுமார் 70 பேருக்கு புதிய முயற்சியாக இந்த மாதம் (பயிற்சியாளர்களும் ஆசிரியர்களே என்கிற எண்ணத்தில்) பத்திரிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்கள்.அதில் அவர்கள் அனுப்பிய பத்திரிக்கையை கொரியர் மூலமாக அனுப்பியதால் என்னுடைய முகவரி மாறி இருந்தாலும் என்னுடயை செல் எண்ணுக்கு தொடர்பு கொண்டதல் அந்த பத்திரிக்கை கிடைத்தது.செய்வதை நன்றாக சரியாக செய்து உள்ளது பாராட்டுக்கு உரியது.அருமையான வாய்ப்பு கிடைத்ததுடன் மதிய உணவும் நன்றாக இருந்தது.இந்த அற்புதமான  வாய்ப்புக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
ONE INDIA TAMIL ONLINE NEWS ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒளி ஏற்றுதல் விழா செய்தி படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

This article has been sent to you using thatsTamil's mail-to-friend option:
செய்திகள், சினிமா தகவல்கள், கேலரி மற்றும் இன்னபிற சேவைகளை வழங்கும் முன்னணித் தளம் தட்ஸ்தமிழ்

This message was sent to you by: jeyam1@ymail.com

Message from sender:



தீபங்கள் ஏற்றும்... தேவகோட்டையில் ஒளி ஏற்றி பிரியாவிடை பெற்ற மாணவர்கள்! | Devakottai school students celebrate light festival - Tamil Oneindia

Devakottai Chairman Manickavasagam middle school students celebrated light festival in the presence of their teachers and parents.

மேலும் செய்திகளுக்கு: http://tamil.oneindia.com/           

Friday 1 May 2015

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா