Sunday 31 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

டிஎஸ்பி கருப்பசாமி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

                  இன்று 21 /6 / 2016 ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றஉலக  யோகா தினத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் திரு .எல் .சொக்கலிங்கம் அவர்களது அழைப்பின் பேரில் தேவகோட்டை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கருப்பசாமி ஆகிய நான் கலந்து கொண்டேன் .

                             யோகா பற்றிய குழந்தைகளின் விழிப்புணர்வு அறிவு மெச்சத் தகுந்ததாகும். பாராட்டத்தக்கதாகும் இருந்தது. குழந்தைகளின் பல்வேறு தலைப்பிலான திறமையின் வெளிப்பாடு பாராட்டத்தக்கதாகும். 

                             பல்வேறு இறுக்கமான சூழ்நிலையில் பள்ளி விழாவில் கலந்துகொண்டது மன இறுக்கத்தை போக்கி சந்தோசமான சூழல் உருவாக்கியது. 

                வாழ்த்துகளுடனும் , அன்புடனும் 
த .கருப்பசாமி, 
டிஎஸ்பி ,
தேவகோட்டை.



Friday 29 May 2020

கோடை பண்பலை 100.5ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் 




Thursday 28 May 2020

கேளுங்க , கேளுங்க நாளைக்கு  காலையில் 10 மணிக்கு கேளுங்க

கோடை பண்பலை 100.5 ல் கேட்டு மகிழுங்கள்
நாள் : 29/05/2020


நேரம் : காலை  சரியாக10.00 AM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

கோடை FM  வானொலியில்
வெளியே வராத வெளிச்சங்கள்
நிகழ்ச்சியில் ஆளுமைகளுடனான அனுபவங்கள் தலைப்பில் நோபல் பரிசு குழு உறுப்பினர் பலாஸ் அவர்களுடனான எனது அனுபவம் பேட்டியாக  ஒலிபரப்பாக உள்ளது.



 
 அகில இந்திய வானொலியில் தொடர்ந்து 18 வாரங்கள் பள்ளி நிகழ்ச்சி ஒலிபரப்பு 



பண்பலை : கோடை பண்பலை 100.5

ஒலிபரப்பாகும் கிழமை  : சனிக்கிழமை ( 30/05/2020 முதல் தொடர்ந்து 17 வாரங்கள் )


நேரம் : மதியம்  சரியாக12.30 PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : ஒரு மணி துளி போட்டி 

பண்பலை : மதுரை பண்பலை 103.3

ஒலிபரப்பாகும் கிழமை  : ஞாயிற்று கிழமை   ( 31/05/2020 முதல் தொடர்ந்து 17 வாரங்கள் )

நேரம் : நண்பகல் 12.02 PM மணி 
 
நிகழ்ச்சியின் பெயர் : ஒரு மணி துளி போட்டி

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!


  ஒரு மணி துளி
நிகழ்ச்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி வெளியாவது குறிப்பிடத்தக்கது.


 



அகில இந்திய வானொலியில் தொடர்ந்து 18 வாரங்கள் பள்ளி நிகழ்ச்சி ஒலிபரப்பு 





Wednesday 27 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

                        அமெரிக்கா நாட்டின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியரும், சிங்கப்பூர் நான்யாங்  பல்கலைக்கழகதின் இணை இயக்குனருமான பரசுராமன் பத்மநாபன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்



பரசுராமன். பத்மநாபன்,
இணை இயக்குனர் ,
நான்யாங்  பல்கலைக்கழகம்,
 சிங்கப்பூர்.
                                    நான் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே கலந்துரையாடினேன். மாணவர்களின் அறிவுத் திறன் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன். ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பாடு படுகிறார்கள். மொத்தத்தில் மிகவும் திறமையான, நிர்வாக திறமையுடன் மாணவர்களின் வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.
 அன்புடன்
பரசுராமன். பத்மநாபன்.


Monday 25 May 2020

தமிழக  காவல் துறை நடத்திய  ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்விற்காக இணைய வழியில் நடைபெற்ற ஓவிய போட்டி 


Sunday 24 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

திரைப்பட இயக்குனரும்,  நடிகருமான இ.வி. கணேஷ் பாபு அவர்களுடன் பழகிய அனுபவம்


                   இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவியரிடையே உரையாற்றினேன். இதுவரை பல நூற்றுக்கணக்கான கல்லூரிகள் , இன்டர்நேஷனல் பள்ளிகளுக்கு சென்றுள்ளேன். இந்தப்பள்ளியில் உள்ள மாணவர்களை போல் சுய சிந்தனை உள்ள மாணவர்களை பார்த்ததில்லை. இவர்களை உருவாக்கிவரும் தலைமையாசிரியர் திரு சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் என் வாழ்த்துக்கள். இந்தியாவின் மிகச் சிறந்த பள்ளிக்கான அடிப்படை தகுதி இந்தப் பள்ளிக்கு உண்டு. இந்தப் பள்ளியை பாதுகாப்போம்.

 இப்படிக்கு,
இ.வி. கணேஷ் பாபு ,
திரைப்பட இயக்குனர்,
 நடிகர்,
 சென்னை.


Saturday 23 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

நீதிபதி கிருபாகரன் மதுரம் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

                   It is very proud to participate in this school programme. Mr.Chokklaingam Head Master arranged in well manner. This activities are higly appreciated. Likewise school teachers also co-operated and guided the students in well manner. Best wishes to aal the Teachers, staffs, and students and also to Correspondents. 

நீதிபதி. கிருபாகரன் மதுரம் 
Sub Judge,
Devakottai.
                           நீதிபதி கிருபாகரன் மதுரம் அவர்கள்  எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு மாணவர்களை பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.     


      

Friday 22 May 2020

கோடை பண்பலை 100.5ல் கேளுங்க , கேளுங்க இன்னைக்கு மதியம்  12.30 மணிக்கு கேளுங்க

நாள் : 23/05/2020


நேரம் : மதியம்  சரியாக12.30 PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : ஒரு மணி துளி போட்டி

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

கோடை FM வானொலியிலும் ,

நாளைக்கு (24/05/2020)  மதியம் பகல் 12.02 மணிக்கு
 மதுரை FM- 103.3 பண்பலையிலும்

  ஒரு மணி துளி
நிகழ்ச்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி வெளியாவது குறிப்பிடத்தக்கது.


 

Thursday 21 May 2020

கேளுங்க , கேளுங்க இன்னைக்கு காலையில் 10 மணிக்கு கேளுங்க

நாள் : 22/05/2020


நேரம் : காலை  சரியாக10.00 AM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

கோடை FM  வானொலியில்
வெளியே வராத வெளிச்சங்கள்
நிகழ்ச்சியில் எனது

  ஆளுமைகளுடனான அனுபவங்கள் பேட்டி ஒலிபரப்பாக உள்ளது.



 

பழகு தமிழில் பாங்காக  பேசக்கூடிய ஒரு மணி துளி போட்டி 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு

Wednesday 20 May 2020

அகில இந்திய வானொலியின் ஒரு மணி துளி போட்டி - சவித்ரா அவர்களின் இனிமையான தமிழ்  பேச்சினை கேளுங்கள் 

நல்ல தமிழ் பேச கற்றுக்கொடுக்கும் ஆளுமை பயிற்சி 

பழகு தமிழில் பாங்கான பேச்சுப் போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் வயது மாணவர்களின்  பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல் ,கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள   போட்டியில் பங்கேற்ற நிகழ்வை வருகிற 23/05/2020 முதல் இதனுடன் உள்ளவாறு கேட்கலாம் :

Saturday 12.30Hrs in Kodai FM 100.5
Sunday 12.02Hrs in Madurai FM 103.3




கேளுங்க ,கேளுங்க கேட்டு மகிழுங்கள்.
 
ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

சப்-கலெக்டர் ஆல்பி ஜான் IAS அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

                                                                                                 Dr.Alby John IAS,
                                                                Sub Collector, DVK

                   It was a pleasure to visit this school and I am happy to see that the teachers are organising a lot of  creative event for the student . keep it up
                                                                                                Dr.Alby John IAS,


Tuesday 19 May 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

தன்னலமற்ற அறிவியல் பயிற்சியாளர் அறிவரசன் அவர்களுடனான பழகிய அனுபவம்


         அறிவியல் என்பது மாணவர்கள் ஆய்வு செய்து பயில வேண்டிய அவசியம் மிகவும் முக்கியமானது. சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையும் வகையில், பல்வேறு  நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது நெகிழ்ச்சியாகவும் ,மகிழ்ச்சியாகவும் , சிறப்பான மாணவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை. அருமையான குழந்தைகள் . மேலும் வளர சிறக்க எனது பணிவான வாழ்த்துக்கள். பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர் திரு. சொக்கலிங்கம்  அவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது வணக்கங்கள். வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.

வி. அறிவரசன் ,

பரிக்ஷ்ன்  அறக்கட்டளை,

(அறிவியல் ஊர்தி)


Monday 18 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

சிக்ரி துணை இயக்குனர் (மத்திய மின்வேதியியல் மையத்தின் ) மற்றும்  மத்திய அரசின் விஞ்ஞானிகளுடனான பள்ளி பகிர்வுகள்

Saturday 16 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

ரோபோட்டிக்ஸ் வல்லுனர் கென்னித் ராஜ் அவர்களுடனான ( தூய்மை பணியாளர் மகன் ) அனுபவம்

    இதுவரை கண்ட அரசுப்பள்ளிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் ஆர்வமுடைய மாணவர்களை இங்கு காண்கிறேன். நிச்சயம் அர்ப்பணிப்புள்ள இந்த ஆசிரியர்கள் இம் மாணவர்களை ஒளிரச் செய்வார்கள். அவர்களின் இம்முயற்சியில் ரோபோடிக்ஸ் துறை சார்பாக நானும் பங்களித்தது மிக மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து பயணிப்போம்.

 மகிழ்வுடன்
அன்பு. கென்னித்ராஜ்,
ரோபோட்டிக்ஸ் வல்லுனர்,
 சென்னை.


Friday 15 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

சப் கலெக்டர் ஆஷா அஜித் IAS   அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

Visited the school as part of National Voter's Day Celebration. The school is celebrating Voter's Day for five years consequently by organising 'கோல போட்டி '. The students are well trained , confident and the HM and teacers are taking all efforts for the betterment of the studnets and the school.Best wishes for the journey ahead. வாழ்த்துக்கள் !

Ashe Ajith, IAS.
Sub - Collector, Devakottai.


                              Attended the Dengue Awarness program @ Chairman Manikca vasagam School,Devakottai. Was a diferent experience wherein students involvement in preparing the exhibits for the exhibition arranged as part of the program could be seen and also was extremely happy to see the level of awarness among the students. Continue the work. Best wishes for the team.


Ashe Ajith, IAS.
Sub - Collector, Devakottai.





Tuesday 12 May 2020

குவைத் நாட்டிலிருந்து வாட்சப் வீடியோ கால் வழியாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்





Monday 11 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. ராஜேந்திரன் அவர்களுடன் பழகிய அனுபவங்கள்  

20/02/2019

 Chairman Manikca vasagam middle school. A great school with humble atmosphere.Brilliant students , sharp, observent.With a mind to enquire into the unknown with humble family background.Dedicated teachers, a H.M. with vision and dediction an out of ordinary person.Great exprience in my life.
                                                   I wish the students and the school a brilliant future.Let god and noble men be with this school.

N.Rajendiran,
Vice Chancellor,
Alagappa University,
Karaikudi.
                                                17/06/2019


                       சிறந்த பள்ளி,சிறப்பான ஆசிரியர்கள்,நல்ல எண்ணம்,சிறந்த முயற்சி இவை அனைத்தும் இப்பள்ளி மாணவர்களை  உலகம் வியக்கும் சாதனையாளர்களாக பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.


N.Rajendiran,
Vice Chancellor,
Alagappa University,
Karaikudi.






Sunday 10 May 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள்

தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

Krishnaraj R IPS
ASP,Devakottai.

                   Had a good interaction with the school students, teachers and Principal of the school on the ocaasion of Bhartiar's day.The studnets are very good and disciplined.The School is doing good under the principal & teachers. I am happy to have come here.
         
                                     All the best!                                Thank you
Devakottai.                                                                        11/12/2019                                                                         Krishnaraj R IPS
                                                                                           ASP,Devakottai.

Saturday 9 May 2020

 ஆளுமைகளுடனான அனுபவம்

ஹாங்காங் நாட்டின் தமிழ்ச் சமூகப் பிரமுகரும், பொறியாளருமான  ராமநாதன் அவர்களுடன் பழகிய அனுபவம்


                                தாய்வழிக்  கல்வியின் சிறப்பைப் பற்றியும் அரசு கல்லூரிகளின்  மேன்மை பற்றியும் ஹாங்காங் வாழ்க்கை பற்றியும் எனது கருத்துக்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். உரையைத் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளும், நிகழ்ச்சியின் நிறைவாக உரையைப் பற்றிய மாணவர்களின் கருத்துரைகளும் என்னை வியப்பில் ஆழ்த்தின. மாணவர்கள் கலந்துரையாடலில் முழுமையாய் பங்கேற்ற விதம் சிறப்பானது, இவர்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
                             இதைச்  சாதித்து வரும் ஆசிரியர்களுக்கும் குறிப்பாக தலைமையாசிரியர் எல். சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 மு. ராமநாதன்
பொறியாளர்
ஹாங்காங்.


Thursday 7 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

 ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை மு. தேன்மொழி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை தேன்மொழி  அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு எழுதிய பள்ளி பற்றி எழுதிய வரிகள்:

                        இன்று இந்தப் பள்ளி மாணவர்களின் திறமையைக்  கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன். பேச்சு, நடனம், பாட்டு என்று எல்லாவற்றிலும் மிகத் திறமையாக இருக்கிறார்கள். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறார்கள். மேலும் இப்பள்ளி ஒரு முன்மாதிரி (மாடல்) பள்ளியாக உருவாகியுள்ளது.  பல பரிசுகள் பெற பல துறையில் திறமையானவர்களாக உருவாக,  வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

 மு. தேன்மொழி,
 பேராசிரியர்
 ஐஐடி மெட்ராஸ்,
 சென்னை.






Tuesday 5 May 2020

ஆளுமைகளுடனான அனுபவம் 

தமிழகத்தின் முதல் பெண் விமானி காவியா அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

தமிழகத்தின் முதல் பெண் விமானி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பின்வருமாறு பள்ளியை பற்றி பாராட்டி எழுதிய வரிகள் :

     Today 06/11/2019, I would like to thank  Mr. Chokkalingam for this golden opportunity. I was so overwhelmed to see each and every student so talented and disciplined. In fact, I have learned a lot of things from the students today. I was too happy to be part of this school far today. I really admire the way students treated the teachers and other fellow beings. Especially I enjoyed the தமிழ் தாய் வாழ்த்து sung by one of the students Nandana. I wish all the happiness prosperity and good well for the Chairman Manikca Vasagam  School students and teachers. Thank you somuch for the golden opportunity. 
                                                With the love,
                                                   Regards,
                                                   Kavya R


Sunday 3 May 2020

வாட்ஸ்அப் வழியாக பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும்  ஆசிரியர்கள்




ஆளுமைகளுடனான அனுபவம் 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சொ . சுப்பையா அவர்களுடன் பழகிய அனுபவம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பையா அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்: 

சொ . சுப்பையா 
முன்னாள் துணைவேந்தர் 
அழகப்பா பல்கலைக்கழகம் 
காரைக்குடி 
05/07/2018

                           இன்று இந்தப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக்  கருதுகிறேன். ஏனெனில் கிராமத்து மாணவர்களிடம் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு . L . சொக்கலிங்கம் ஏற்படுத்தித் தந்தார். இப்பள்ளியின் செயல்பாடுகள் ,மாணவர்களை வழி நடத்தும் விதம், வாழ்க்கையில் சாதித்தவர்களையும், உயரிய பதவியில் உள்ளவர்களையும்  அழைத்து மாணவர்களிடம் கலந்துரையாட வைப்பது மிகச்சிறந்த நடைமுறையாகும். மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகளை இப்பள்ளியில் நடத்துவதோடு மட்டுமின்றி, பிற நிறுவனங்களில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளுக்கும், போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க வைப்பது மிகவும் சிறப்பான அம்சம் ஆகும். ஒரு அரசு உதவி பெறும் பள்ளியை தனியார் பள்ளியை விட சிறப்பாக தலைமையேற்று நடத்துகிறார் தலைமையாசிரியர் அவர்களையும் துணையாக அவருக்கு துணையாக செயல்படுகிற ஆசிரியர் பெருமக்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பள்ளி, இன்னும் பல சிறப்புகளையும், பெருமைகளையும் இத் தலைமை ஆசிரியரின்  தலைமையில் அடையும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
                                                                                        வாழ்த்துக்களுடன் 
                                                                                       சொ .சுப்பையா