Saturday 31 July 2021

 கற்போம் எழுதுவோம் - மதிப்பீட்டு முகாம் 

வீடுகளுக்கும்,வேலை பார்க்கும் இடங்களுக்கும் சென்று தேர்வு நடத்திய மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டம்

எழுத ,படிக்க கற்றுக்கொண்டவர்களுக்கு வீடு தேடி சென்று மதிப்பீட்டு முகாம் 

 


 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் எழுத,படிக்க கற்றுக்கொண்ட  முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கும் வேலை பார்க்கும் இடங்களுக்கும் சென்று மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட்டது.
                                            தமிழ்நாடு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் , 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, 'கற்போம் எழுதுவோம்' என்ற பெயரில் புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையமான நடராஜபுரம் பகுதியில் எழுத படிக்க கற்றுக்கொண்ட  பெரியவர்களுக்கு 
மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி  ஆர்வத்துடன் கற்றுக்கொடுத்து வந்தார்.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.மாற்று திறனாளி பெண் தன்னார்வலர் நந்தினி ஆர்வத்துடன்  கற்றுக்கொண்டவர்களுக்கு   தேர்வு நடத்தினார் . இத்திட்டத்தில் பயிலும்  பலரும் வேலை பார்ப்பதாலும், முதியவர்களாக இருந்ததாலும் அவர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கும், வீடுகளுக்கும் சென்று பரவலாக்கப்பட்ட முறையில்   தேர்வு நடத்தப்பட்டது.இத்திட்டத்தில் படிப்பவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். மதிப்பீட்டு முகாமிற்கான ஏற்பாடுகளை வீடுதோறும் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியைகள் முத்துமீனாள் ,முத்துலெட்சுமி,ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் செய்து இருந்தனர்.

 

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் எழுத,படிக்க கற்றுக்கொண்ட  முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கும் வேலை பார்க்கும் இடங்களுக்கும் சென்று மதிப்பீட்டு முகாம் பரவலாக்கப்பட்ட முறையில்   நடத்தப்பட்டது.மதிப்பீட்டு முகாமை மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியைகள் முத்துமீனாள் ,முத்துலெட்சுமி,ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் நடத்தினார்கள்.



No comments:

Post a Comment