Thursday 7 March 2024

  பரிசளிப்பு விழா 

  ஒழுக்கமே வாழ்வில் உயர்வு தரும்  - மாணவர்களுக்கு அறிவுரை

அறக்கட்டளை நிர்வாகி  பேச்சு 







































தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                                            ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை நிர்வாகி சிதம்பரம் முன்னிலை வகித்தார் . அறக்கட்டளை  நிர்வாகி  அய்யப்பன் பேசுகையில் , 
கல்வியோடு சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.கண்முன் கஷ்டப்படுவபவர்களுக்கு உதவ வேண்டும்.தானத்தில் சிறந்தது அன்னதானம். அதையும் தாண்டி சிறந்தது நிதானம்.எதிலும் பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும்.. என்று பேசினார்.போட்டிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் ரித்திகா,நந்தனா,ஜெயஸ்ரீ,பிரஜித் ,கனிஸ்கா  ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது . நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் சிதம்பரம்  ,  அய்யப்பன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ

 https://www.youtube.com/watch?v=gIKylwpC12g

 

No comments:

Post a Comment