Sunday, 3 March 2024

 நற்சிந்தனை நன்னடை விருது 

பள்ளியில்  மாணவிகளுக்கு  பாராட்டு 






 

தேவகோட்டை-  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நற்சிந்தனை நன்னடை விருது பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


                                                   சமீபத்தில் மதுரையில் சேதுபதி பள்ளியில் தி இந்து தமிழ் திசை நாளிதழின் சார்பில் நடைபெற்ற நற்சிந்தனை நன்னடை விருது வழங்கும்  விழாவில்    விருதுகளை  எழுத்தாளர் தமிழ்செல்வன், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ,வாக்கரூ நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் ராஜேஷ் மெத்தேயூ குரியன், மதுரை சேதுபதி பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன்  ஆகியோர் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ரித்திகா மற்றும் நந்தனா ஆகியோருக்கு வழங்கினார்கள்.  விருது பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி, முத்துமீனாள் ஆகியோர்  பாராட்டினார்கள். தொடர்ந்து சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய வகையில் நற்சிந்தனைகளை உருவாக்கி நன்னடத்தையை கடைபிடிக்க வேண்டுமென்று மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் வலியுறுத்தினார்.


 படவிளக்கம் : சமீபத்தில் மதுரையில் சேதுபதி பள்ளியில்  தி இந்து தமிழ் திசை நாளிதழின் சார்பில்  நடைபெற்ற நற்சிந்தனை நன்னடை விருது வழங்கும்  விழாவில்    விருதுகளை  எழுத்தாளர் தமிழ்செல்வன், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ,வாக்கரூ நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் ராஜேஷ் மெத்தேயூ குரியன், மதுரை சேதுபதி பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன்  ஆகியோர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ரித்திகா மற்றும் நந்தனா ஆகியோருக்கு வழங்கினார்கள். 

 

 

 வீடியோ : 

https://www.youtube.com/watch?v=2JAeTFj7Ccs&t=9s


No comments:

Post a Comment