வகுப்பறை ஒழுக்கமே சட்டம்
பெண்குழந்தைகள் மொபைல் போனில் அடிக்கடி செலஃபீ எடுப்பதை பெருமளவு தவிர்த்துக்கொள்ளுங்கள்
நீதிமன்ற நடுவர்கள் பேச்சு
சட்ட விழிப்புணர்வு முகாம்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தேவகோட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாரிமுத்து,பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் , வழக்கறிஞர்கள் சொர்ணலிங்கம், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .
முகாமில் சட்ட வட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்றத்தின் நடுவருமான வீரண்ணன் மாணவர்களிடம் பேசும்போது, கற்க கசடற என்ற குறளுக்கு ஏற்ப படிப்பதை அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும் படிப்பதற்கு ஏற்ப அதன் வழியில் வாழ வேண்டும்,
காசு வாங்கிட்டு ஓட்டு போடக்கூடாது என உங்களுடைய பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். சைபர்கிரைம் என்பது இணையதள குற்றங்களுக்காக கொண்டுவரப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் , வரிகளுக்காக கொண்டுவரப்பட்ட சட்டம் என சட்டங்கள் பல வகை உண்டு. ஆசிரியரும், அம்மாவும் இரண்டு பேரும் ஒன்று தான்.பெண்குழந்தைகள் மொபைல் போனில் அடிக்கடி செலஃபீ எடுப்பதை பெருமளவு தவிர்த்துக்கொள்ளுங்கள்
நீங்கள் சட்டங்களை மதித்து வாழ்க்கையில் நல்லவர்களாக வாழ முயற்சி எடுத்து வெற்றி பெறுங்கள். தேவகோட்டையில் உள்ள சட்ட மையத்தை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம் என்று சார்பு நீதிமன்ற நடுவர் பேசினார்.
குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாரிமுத்து மாணவர்களிடம் பேசுகையில், 18 வயதிற்கு மேற்பட்டோர் லைசென்ஸ் வாங்கிய பிறகு வாகனம் ஓட்ட வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்திற்கான ஓட்டுதல் உரிமம் ரத்து செய்யப்படும்
7 வயதிலிருந்து 12 வயதுக்குள் உள்ளவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எழுதப்பட்ட சட்டம், எழுதப்படாத சட்டம் என்று இரண்டு வகையான சட்டம் உள்ளது.
பள்ளி வகுப்பறையில் வரிசையாக உட்காருதல் , ஆசிரியர் வகுப்பில் உள்ளபோது அமைதியாக இருப்பதை விட இல்லாத நேரத்தில் அமைதியாக இருத்தல், காலணிகளை பள்ளியில் வரிசையாக அடுக்குதல் போன்றவை எழுதப்படாத சட்டங்களாகும் .
இதுபோன்று விதிகளை நாம் யாரும் கூறாமல் பழகி விட்டால் நமக்கு சட்டம் என்பதே தேவைப்படாது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் நீதிமன்ற ஊழியர்கள் பானுமதி, ரோஸி உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான பெற்றோரும் பங்கு கொண்டு பல்வேறு சட்டம் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார் .சட்டம் தொடர்பாக சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் , வழக்கறிஞர்கள் சொர்ணலிங்கம், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் , சார்பு நீதிமன்ற நடுவருமான வீரணன் தலைமை தாங்கினார். சட்டம் தொடர்பாக சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
வீடியோ:
https://www.youtube.com/watch?v=hAPRqlRkggk
https://www.youtube.com/watch?v=Vy35aLbbhws
நீதிமன்ற நடுவர்கள் மேலும் பேசியதாவது :
மரக் கன்றுகளை நடுதல் வேண்டும். நமக்கு மட்டுமல்ல நமக்கு பின்னால் மற்றவர்களுக்கும் தூய்மையான அந்த மரங்களின் மூலமாகப் இந்தப் பள்ளியை பார்த்தவுடன் நான் பள்ளியில் படித்த ஞாபகம் வருகிறது.
அறிவியல் பாடம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது ஆசிரியர்கள் குருவம்மாள், பாத்திமா என்று அனைவரும் என்னால் ஞாபகப்படுத்தி பார்க்க முடிகிறது.
குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி எடுத்துக்கூற வேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு யாரேனும் கொடுத்தால் ஆசிரியரிடம் தெரிவிக்கவேண்டும். அடுத்தவர்களின் பொருள்களுக்கு எப்போதும் ஆசைப்படக்கூடாது.
பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாட்சி சொல்லும்போது திரைக்குப் பின்னாலிருந்து கூறுவார்கள் . அவர்கள் பெயர் குறிப்பிடப்படமாட்டாது.
அலைபேசியில் உள்ள தகவல்களை அழித்த பின்னும் அதில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் எடுத்து விடலாம் .அதனால் அலைபேசியை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும்.
காடுகளில் மரங்களை வெட்டக்கூடாது.. வெட்டிய மரங்களை எடுக்கக் கூடாது. அதை கரையான்கள் சாப்பிடும். கரையான்களை பறவைகள் சாப்பிடும்.
நல்ல எண்ணங்களுடன் நல்ல சிந்தனைகள் வளர வேண்டும். நாம் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதை நினைத்து பார்க்கவேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும்.
நானும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தான் வழக்கறிஞர் படிப்பிற்கு வந்தேன். ஏனென்றால் எனது அப்பா அம்மாவிற்கு இது போன்ற விவரங்கள் தெரியாத நிலையில் எனது ஆசிரியர்களே என்னுடைய மேற்படிப்பு வரை முழு அளவில் வழிகாட்டினார்கள்.
ஆசிரியர்களை நேசியுங்கள். பள்ளியை நேசியுங்கள். சட்டம் உங்களுக்கு தானாக வந்துவிடும். சட்டத்தை பின்பற்றும் வழிமுறை தானாக வந்துவிடும். சிறு வயது குழந்தைகள் பாதிக்கப்பட்டால் தயங்காமல் இலவச சட்ட மையத்தை அணுகலாம். ரகசியம் காக்கப்படும். இவ்வாறு பேசினார்கள்.
No comments:
Post a Comment