உடற்கல்வி ஆசிரியர் நண்பர் விஸ்வநாதனுக்கு நன்றி
நண்பர்களே சில ஆண்டுகளாக தொடர்ந்து தொலைபேசி வழியாக பேசிவரும் சென்னையில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் விஸ்வநாதன் அவர்கள் பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து பல தகவல்களை பேசி வருகின்றார். சமீபத்தில் சென்னை சென்றபோது அவரை சந்தித்தேன். தொலைபேசியிலேயே பல நாளாக பேசிக் கொண்டிருப்பதால் நேரில் சந்திப்போம் என்று கேட்டிருந்தேன்.
ஏற்கனவே இரண்டு முறை என்னால் சந்திக்க இயலவில்லை. இந்த முறை சந்திப்போம் என்று கேட்டிருந்தேன். அதன் அடிப்படையில் நண்பரை சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயில் அருகே சந்தித்தேன்.
முதல் நாளே நண்பர்களிடம் பேசும்போது காலை உணவு மற்றும் மதிய உணவை அவசியம் எங்கள் வீட்டில் சாப்பிடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
இருந்தபோதிலும் காலையிலேயே கணவனும், மனைவியும் இருவரும் மகன்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக செல்கின்ற தகவலை தெரிந்துகொண்டு அவர்களுக்கு சிரமம் ஏற்பட வேண்டாம் என்கிற எண்ணத்தில் காலையில் ஹோட்டலில் உணவு சாப்பிட்டேன்.
ஆனால் அவர்களோ காலை 4 மணிக்கே எழுந்திருந்து காலை உணவிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, அதன் பிறகே மகன்களை பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த விவரம் எனக்கு தாமதமாகத் தான் தெரியும். எனக்கும் சங்கடமாக இருந்தது .காலை உணவை அவர்கள் வீட்டில் சாப்பிட முடியவில்லையே என்று.
பிறகு பகல் முழுவதும் நண்பர் விஸ்வநாதன் அவர்களும், அவரது இணையரும் , அவரது மகன்களும் என்னிடம் மிகவும் அன்பாகவும், பிரியமாகவும், பாசத்துடனும் நடந்துகொண்டனர். காலை பொழுது சென்றது எனக்கு தெரியவில்லை.
நண்பர் விசுவநாதன் அவர்களின் இணையர் மதியம் மிக அருமையான சிக்கன் பிரியாணி செய்திருந்தனர்.. சில்லி சிக்கனும் செய்திருந்தனர். மிக்க நன்றி.அனைத்தையும் நல்ல முறையில் மகிழ்வோடு சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து நேராக எனது நண்பர் ஆனந்த் அவர்கள் வீட்டிற்கு சென்றேன்.
சில ஆண்டுகளாக தொடர்ந்து அலைபேசியில் பேசினாலும், நேரில் சந்தித்தபோது மகிழ்வுடனும், பாசத்துடனும் அவர்களது குடும்பத்தாரும் அன்போடு நடந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
நண்பர் விஸ்வநாதன் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மகிழ்வுடன்
லெ . சொக்கலிங்கம்,
. காரைக்குடி
No comments:
Post a Comment