Wednesday 27 March 2024

 வடைகறியும் , சைதாப்பேட்டை மாரி ஹோட்டலும் 




 நண்பர்களே சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டை சென்றிருந்தபோது அன்பு தோழர் அன்பு அவர்கள் அன்புடன் சைதாப்பேட்டை  காரணீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ள மாரி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

                             மாரி ஹோட்டலில் வடைகறி மிக அருமையாக இருக்கும் என்றும், காலையில் ஒரு வடகறி, இரண்டு இட்லி, ஒரு மசாலா தோசை சாப்பிட்டால்  காலை முழுவதும் நன்றாக உறக்கம் வரும் என்றும் கூறினார்.

                             நாங்கள் மாரி  ஹோட்டலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, எங்களின் அருகே மயிலாடுதுறையை சேர்ந்த பெண்மணி   ஒருவர் மெலிதாக புன்னகைத்தார். 

                            இவ்வளவு நளினமாக புன்னகைக்கிறார் என்று நாங்கள் பார்த்தபோது, அவராகவே எங்களிடம் பின்வருமாறு பேசினார்,  நான் ஒரே ஒரு முறை சில வருடங்களுக்கு முன்பாக வடைகறி நன்றாக இருக்கும் என்று இந்த ஹோட்டலில் சாப்பிட்டேன். 

                பிறகு வடை கறியின் சுவை பிடித்து போய் தற்பொழுது மயிலாடுதுறையில் இருந்து சென்னை எப்பொழுது வந்தாலும் இந்த கடையில் வடை கறி சாப்பிட்டு விட்டு, எனது குடும்பத்தினருக்கும் தவறாமல் பார்சல் வாங்கி செல்கின்றேன் என்று எங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் .

                            தோழர் அன்பு அவர்கள் சொன்னது போலவே ஒரு வடை கறியும் , மசாலா தோசையும், இரண்டு இட்லியும் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருந்தது. அன்பு தோழர் அன்பு அவர்களுக்கு மிக்க நன்றிகள் பல.

                        இந்த ஹோட்டலில் கேஷ் மட்டும்தான் கொடுக்க இயலும். போன்  பே , கூகிள் பே போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. கையில் காசு, வாயில் வடை என்பதற்கேற்ப இந்த ஹோட்டல் அமைந்துள்ளது .எனவே கையில் , சட்டை பையில்  காசு இல்லாமல் மாரி  ஹோட்டலுக்கு செல்வது வேஸ்ட்.

                     மேலும் இந்தப் பயணத்தின் போது  காலையில் ட்ரெயினை விட்டு இறங்கிய உடனேயே சைதாப்பேட்டை மார்க்கெட்  பகுதிக்குச் சென்று நம்மாழ்வார் குழுவினர் நடத்தி வரும் இயற்கை உணவு கடையில்  முருங்கைக்கீரை சூப்பும், முடக்கத்தான் சூப் வாங்கி சாப்பிட்டோம்.

                                முடக்கத்தான் சூப் மிக அருமையாக இருந்தது. பெரிய மண் டம்ளரில் நல்ல சூடாக கொடுத்தனர். ஆனால்  ஒரு சில நிமிடங்களில் சூடு அடங்கி குடிக்க ஏதுவாக இருந்தது.

                                 மீண்டும் மாலையில் சைதாப்பேட்டை பஜார் அருகே உள்ள அதே   நம்மாழ்வார் குழுவினரின் கடைக்கு சென்று மீண்டும் ஒருமுறை முடக்கத்தான் சூப், முருங்கைக்கீரை சூப் வாங்கிக்கொடுத்தார்.

                                 பிறகு அங்கேயே சுட,சுட இனிப்பு புட்டும்  வாங்கிக்கொடுத்தார். இரவு உணவை நான் சாப்பிடவில்லை. அதுவே மிகவும் வயிற்றுக்கு இதமாக இருந்தது. அன்புத் தோழர் அன்பு அவர்களுக்கு மீண்டும் நன்றிகள் பல.

                                அடுத்த நாள் காலையில் வாக்கிங் சென்றபோது , அசோக் பில்லர் அருகே முடக்கத்தான் சாறும் , கீரை ரசமும் வாங்கி கொடுத்தார்.அதுவும் நன்றாக இருந்தது. தோழருக்கு நன்றிகள் பல.

                            வாட்சப் குழுவின் மூலம் பழக்கமான தோழர் அன்பு அவர்கள் பழகிய சில நாட்களிலேயே மிகவும் பாசமுடன் பழகி பல உதவிகளை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.நன்றி.


அன்புடன் 

லெ .சொக்கலிங்கம்,

காரைக்குடி.










No comments:

Post a Comment