Monday, 25 March 2024

 பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழா 

 நூலக புத்தகம் படித்த  மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ஆர்.டி.ஓ.

 








 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர்  ரூபாய் 5000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார். 

                          தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர்  பால் துரை   பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பேசுகையில், " தமிழ் வழி கல்வியில் படிக்கும்போது பொது அறிவு அதிகமாக வளரும். நூலக புத்தகங்களை வாசிக்கும்போது நமக்கு பரந்துபட்ட அறிவு வளரும்.நம்மால் பலரின் வாழ்க்கை வரலாறை புத்தகங்கள் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் நமது வாழ்க்கையை செம்மையாக்கலாம் . இந்த பள்ளியில் மாணவர்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றது.வாழ்த்துகள் என்றார். சிறப்பாக புத்தகம் வாசித்து கருத்துக்களை கூறிய மாணவர்கள் அஜய்,கனிஷ்கா,தீபா ,முகல்யா , யோகேஸ்வரன் ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள் ,பாரதி  உட்பட பலர் பங்கேற்றனர்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர்  பால் துரை ரூபாய் 5000 மதிப்பிலான புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் வழங்கினார்.சிறப்பாக புத்தகம் வாசித்து கருத்துக்களை கூறிய மாணவர்கள் அஜய்,கனிஷ்கா,தீபா ,முகல்யா , யோகேஸ்வரன் ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள் ,பாரதி  உட்பட பலர் பங்கேற்றனர்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=W27niyMXlCQ

https://www.youtube.com/watch?v=FNXU6KdAcUg


No comments:

Post a Comment