உலக தண்ணீர் தினம்
கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
இளம் வயதிலேயே தண்ணீர் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் - வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரை
தேவகோட்டை - உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து மாணவர்களிடம் பேசுகையில், அதிகமான அளவில் சிறுதானியங்களை சாப்பிடுவதற்கு முயற்சி எடுங்கள். சிறுதானியங்கள் உற்பத்தி செய்வதற்கு தண்ணீர் மிகக்குறைந்த அளவே போதுமானது .தண்ணீர் தேவையை நாம் குறைத்துக் கொண்டால் வருங்கால சந்ததியருக்கு அது பல்வேறு வகையில் உதவிகரமாக இருக்கும் . தண்ணீர் சேமிப்பு தொடர்பாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவிஷா , விஜய் கண்ணன், ஓவியா, தர்ஷினி ,ஜாய் லின்சிகா , முகல்யா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment