Monday, 4 March 2024

  பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கிய மருத்துவர்

 

பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கும் விழா






 

 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை மருத்துவர் ரூபாய் 10,000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார். 

                          தேவகோட்டை செந்தில் மருத்துவமனை இயக்குனர்  மருத்துவர்  சிவகுமார்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பேசுகையில், " தொடக்க கல்வியில் இருந்தே வாசிப்பை பழக்கமாக்க வேண்டும்.இந்த வயதில் புத்தகங்கள் வாசிப்பது கடினமாக இருக்கும். புத்தகங்கள் தன்னம்பிக்கை , தைரியத்தை வழங்க வல்லவை. சமூகத்தை பற்றிய சிந்தனையை உருவாக்கும். நல்லபுத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தால் , வாழ்வில் வெற்றியாளராக திகழலாம்" வாழ்த்துகள் என்றார்.நிகழ்வில் பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் , ஆசிரியை பாரதி  உட்பட பலர் பங்கேற்றனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு தேவகோட்டை செந்தில் மருத்துவமனை இயக்குனர்  மருத்துவர் சிவக்குமார்  ரூபாய் 10,000 மதிப்பிலான புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் வழங்கினார். 

 

 

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=12Q1zH7A9K8

No comments:

Post a Comment