Friday, 15 March 2024

 மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி 

ஆர்.டி.ஓ. கொடி அசைத்து துவக்கி வைத்தார்







 

























































தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வரும்  கல்வியாண்டிற்கான தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணி நடந்தது.

                         இதில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை  தலைமை ஏற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், பாரதி உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.மேலும் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்களையும் கோட்டாட்சியர் பால்துரை வழங்கினார்

                     தேவகோட்டையில் உள்ள முக்கிய வீதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவ மாணவியர் பேரணி சென்றனர். 

                இந்த பேரணியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்,  எண்ணும் எழுத்தும் திட்டம் , மாணவிகளுக்காக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, வாசிப்புத் திறனை வளர்க்க தேன் சிட்டு எனும் சிற்றிதழ் , வினாடி-வினா போட்டி, திரைப்பட விழாக்கள், இலக்கிய மன்ற செயல்பாடுகள் உட்பட பல்வேறு நலன்களை எடுத்துக் காண்பித்து பெற்றோர்கள்  மற்றும் மாணவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 

 

பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வரும்  கல்வியாண்டிற்கான தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணி நடந்தது. இதில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால் துரை  தலைமை ஏற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஸ்ரீதர்,  முத்துமீனாள், பாரதி உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=Wf_Os2l4Y6M

https://www.youtube.com/watch?v=HAEL2qTNpiw

https://www.youtube.com/watch?v=43HEiB7BrkE







:                                           

No comments:

Post a Comment