நினைவாற்றல் பயிற்சி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நினைவாற்றல் பயிற்சி நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலாயுத ராஜா மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் இளம் வயதிலேயே நல்ல நினைவாற்றல் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும். எளிதாக நமது நினைவாற்றலை வளர்த்தெடுப்பதற்கு நிறைய வழிமுறைகள் உண்டு. அந்த வழிமுறைகளை பின்பற்றி நம்முடைய இலக்கை எளிதாக அடையலாம். நினைவாற்றலில் நாம் சிறுசிறு பகுதிகளாக நினைவில் வைத்துக்கொண்டு அவற்றை தொடர்புபடுத்தி பயன்படுத்த வேண்டும் என்று பேசினார். பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி ,முத்துமீனாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நினைவாற்றல் பயிற்சி நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் வேலாயுத ராஜா மாணவர்களுக்கு பல்வேறு விதமான வழிமுறைகள் எடுத்துக்கூறி நினைவாற்றல் திறனை வளர்த்துக்கொள்ள தகவல்களை கூறினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=zaAXieOW7vs
https://www.youtube.com/watch?v=W5jrZx8a_18
No comments:
Post a Comment