Tuesday 28 September 2021

 உலக சுற்றுலா  தினம்  

இணையவழி போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

 































தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உலக சுற்றுலா  தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

                               கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருப்பதனால் இப பள்ளி மாணவர்களுக்கு உலக சுற்றுலா  தினம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வமீனாள்  ஆகியோர் இணையம் வழியாக எடுத்துக் கூறினார்கள். பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடையே சுற்றுலா  தினத்தின் முக்கியத்துவத்தையும் , சுற்றுலா சென்றதின் அனுபவத்தையும்   விளக்கும் வகையில் பேசியும், ஓவியங்களாக வரைந்தும், சுற்றுலா  தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.   

                                                         

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழியாக உலக சுற்றுலா  தின முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். உலக சுற்றுலா தினம் தொடர்பான தகவல்களை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும்  ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வமீனாள்  ஆகியோர் இணையத்தின் வழியாக தெளிவாக விளக்கினார்கள். மாணவர்களும் ஓவியங்கள் வரைந்து, பாடல்கள், கவிதை, பேச்சு மூலமாக சுற்றுலா தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.

 

வீடியோ 

https://www.youtube.com/watch?v=9XyZl7saTFs

 https://www.youtube.com/watch?v=hPQB7dCORYI

No comments:

Post a Comment