Sunday 19 September 2021

  நெதர்லாந்து நாட்டின்  பாரதியார் நூற்றாண்டு விழா போட்டிகளில் முதல் , இரண்டாம் பரிசினை பெற்று  அசத்திய பள்ளி மாணவர்கள்






























































தேவகோட்டை-  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக நெதர்லாந்து நாட்டில்  நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சியில்  பங்குபெற்று முதல்,இரண்டாம் பரிசினை வென்று அசத்தினார்கள்.

                                    இணையம் வழியாக நெதர்லாந்து நாட்டின் சூரிய தமிழ் தொலைக்காட்சி மற்றும் மாற்றத்திற்கான விதைகள் அமைப்பு இணைந்து மாணவர்களுக்கான பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்வினை  மாற்றத்திற்கான விதைகள் துணை தலைவர் தமிழரசு தொகுத்து வழங்கினார்.நெதர்லாந்து நாட்டின் சாந்தி ரவீந்திரன் தலைமை தாங்கினார்.தமிழகத்தின்  பல்வேறு இடங்களில் இருந்து பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வில் இப்பள்ளி மாணவர்கள் அட்சயா முதலிடத்தையும், தேவதர்ஷினி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.இப்பள்ளியில் இருந்து மட்டும் சுமார் 20 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.இப்பள்ளி மாணவர்களை இணையம் வழியாக தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துமீனாள் ,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,பங்கேற்ற மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விரைவில் இவர்களுக்கு நெதர்லாந்து நாட்டின் சான்றிதழும் பரிசு பொருளும் வழங்கப்பட உள்ளது.கொரோனா  நேரத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்பட இணையம் வழியாக போட்டிகள் நடத்திய நெதர்லாந்து நாட்டின் சூரிய தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் , மாற்றத்திற்கான விதைகள் அமைப்பிற்கும் பள்ளி சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஜெயசீலி தயாளன், வீர பாலச்சந்தர், சரவணன் ,பாவலர் சரஸ்வதி பாஸ்கரன் ,வேணுகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.


படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக நெதர்லாந்து நாட்டில்  நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்று  முதல்,இரண்டாம் பரிசினை வென்று அசத்தினார்கள்.

  

 

 

 

 

 

No comments:

Post a Comment