Thursday 2 September 2021

  குறள் முற்றெழுதியோர் விருது பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள் 

 குழந்தைகள் தலைமுடியில்  கூடு வளராமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் - போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோள்

குழந்தைகளை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - காவல் ஆய்வாளர் பேச்சு

குழந்தைகளுக்கு 1330 திருக்குறள்  எழுதும் போட்டி - சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி












தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு திருக்குறள் வளர் அமைப்பின் குறள் முற்றெழுதியோர் விருது வழங்கும் விழா  நடைபெற்றது.

                                    சமீபத்தில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து இணையம் வழியாக முத்தமிழ் கல்வி நிலையம் மூலமாக 1330 திருக்குறளையும் எழுதி அனுப்பும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குவதாக அறிவித்தனர். இப்பள்ளியில் இருந்து 34 மாணவர்கள்  1330 திருக்குறளையும் எழுதி அனுப்பினார்கள் .  பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .தேவகோட்டை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி  தலைமை தாங்கி  திருக்குறள் வளர் அமைப்பின் குறள் முற்றெழுதியோர் விருது போட்டிகளில் பங்குபெற்றதற்கான சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார் . அவர் பேசுகையில் , பெற்றோர்கள் கொரோனா காலத்தில் தங்களின் குழந்தைகளை அதிகம் கண்காணிக்க வேண்டும்.இணையம் வழியாக பாடங்கள் படிக்கும்போது அதிக கவனம் வேண்டும்.கொரோனா காரணமாக மாணவர்கள் அதிகம் வீடுகளில் முடங்கி கிடப்பதால் அவர்களின் தலைமுடி அதிகம் வெட்டப்படாமல் உள்ளது.சிலரின் தலைமுடி குருவி கூடு கட்டும் அளவிற்கு அதிகமாக உள்ளது.அதனை பெற்றோர்கள் சரி செய்து கொள்ள சொல்லுங்கள்.தமிழ் வழியில் படித்தால் அதிகமான அரசு பதவிகளை அடைய இயலும்.கொரோனா காலத்திலும் நீங்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்குபெற்று திருக்குறள் எழுதி சான்றிதழ் பெற்றுள்ள உங்களை நினைத்து பெருமை அடைகின்றேன். மகிழ்ச்சி அடைகின்றேன். வித்தியாசமான நிகழ்வுகளை நீங்கள் தொடர்ந்து செய்து உங்கள் கனவுகளை நனவாக்குங்கள். வாழ்த்துக்கள். என்று பேசினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள், ஸ்ரீதர்,கருப்பையா  ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார். தமிழகம் முழுவதும் இப்போட்டியை முயற்சி எடுத்து நடத்திய முத்தமிழ் கல்வி நிலையத்தின் கூட்டு முயற்சிக்கும் பள்ளி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

 

  படவிளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வளர் அமைப்பின் குறள் முற்றெழுதியோர் விருது  போட்டியில்  பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை தேவகோட்டை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன் வழங்கினார். நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

 

 வீடியோ

 https://www.youtube.com/watch?v=Ibz_8_-mTYI

 



No comments:

Post a Comment