Monday 20 September 2021

குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிய பள்ளி 
மாணவர்களின் அறிவை குறைக்கும் குடற்புழுக்கள்


அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்  தகவல்

 


 







 

















 

  தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  குடற்புழு நீக்க மாத்திரைகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

            பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில்  தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள்  மேரி மற்றும்  ஆரோக்கிய செல்வி   ஆகியோர் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் வீடுகளில் இருப்பதால் குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி பேசுகையில் , குடற்புழு மாத்திரைகள் வருடம் இரண்டு முறை வழங்கப்படுகிறது.குடற்புழுக்கள் பொதுவாக நமது கையின் வழியாக சரியாக கழுவாமல் சாப்பிடும்போது நமக்கே தெரியாமல் மைக்ரோ அளவில் கையில் ஒட்டி கொண்டு வயிற்றின் உள்ளே சென்று பெரிதாக வளர்ந்து ,நாம் சாப்பிடும் உணவை அது சாப்பிட்டு நமக்கு சுகவீனம் மற்றும் அசதி ,சோர்வு,படிப்பில் கவனமின்மை ஏற்படுகிறது.இதனால் உடல் மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சி தடைபடுகிறது.இதனை நீக்க மாணவர்கள்  அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) உட்கொண்டு பயனடையுங்கள்  என்று கூறினார்கள்.பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ,செல்வமீனாள்  ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.



பட விளக்கம் :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  குடற்புழு நீக்க மாத்திரைகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

வீடியோ 

https://www.youtube.com/watch?v=vSgNxQ-SQLI

No comments:

Post a Comment