Thursday 16 September 2021

 உலக ஓசோன் தினம் 

இணையவழி போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள் 

பூமிப்பந்தை சாக்கடையாக்கி நிலவில் நீர் தேடுகிறான் மனிதன் 

தாய்ப்பாலை கூட தயாரிக்க நினைக்கின்றான் மனிதன் 

பழமையான இயற்கையை வளமாக்குவோம் 

எதனாலே? எதனாலே? ஓசோனில் ஓட்டை எதனால்? என்கிற பாடல் வரிகளின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 

 


 

 

 

 

 



































தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

                               கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருப்பதனால் இப பள்ளி மாணவர்களுக்கு உலக ஓசோன் தினம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வமீனாள்  ஆகியோர் இணையம் வழியாக எடுத்துக் கூறினார்கள். பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடையே ஓசோன் தினத்தின் முக்கியத்துவத்தையும் , மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும்  விளக்கும் வகையில் ஓவியங்களாக வரைந்தும், கவிதை, பாடல்,  பேச்சு வழியாகவும்  ஓசோன் தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.   

                                                          மனிதன் சொகுசாக வாழ்வதற்காக இயற்கையை அழிக்கும் நிலையை வெகுவாக சாடியும் , மரங்கள் அதிகமாக வளர்க்கவும், வளிமண்டலத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி பாடல்கள் பாடினார்கள். ஓவியங்கள் வரைந்து மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழியாக உலக ஓசோன் தின விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. உலக ஓசோன் தினம் தொடர்பான தகவல்களை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும்  ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வமீனாள்  ஆகியோர் இணையத்தின் வழியாக தெளிவாக விளக்கினார்கள். மாணவர்களும் ஓவியங்கள் வரைந்து, பாடல்கள், கவிதை, பேச்சு மூலமாக ஓசோன் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.

 

வீடியோ 

 https://www.youtube.com/watch?v=weDgOwxKgdE

 https://www.youtube.com/watch?v=88_8JVkOEe0

 https://www.youtube.com/watch?v=WeZKHqjIlVU

 

 

 

 

No comments:

Post a Comment