Wednesday 8 September 2021

  உலக எழுத்தறிவு தினம் 

பள்ளி மாணவ,மாணவியர் மொபைல் போனில் சாட் செய்வதை தவிர்த்து விடுங்கள் - போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை 

அறிமுகமானவர்களும்,அறிமுகமில்லாதவர்களும் உடலின் பாகங்களை தொடுவதை குழந்தைகள்  அனுமதிக்க வேண்டாம் - போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோள்

 







தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் நிகழ்வு நடைபெற்றது. 

 

                                                ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திலகா தலைமை தாங்கி பேசுகையில் , உலக எழுத்தறிவு தினமான இன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தை  அறிந்து கொண்டதால் தான் நான் இன்று இந்தப் பதவியில் இருக்கின்றேன் .நீங்களும் படித்து வருகிறீர்கள். உங்களை சுற்றியுள்ள அனைவருக்கும் கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் இன்று  கல்வியை மொபைல் வழியாக தான் பயன்படுத்துகின்றோம். மொபைல் பயன்படுத்தும் பொழுது தேவையில்லாத பிரண்ட்ஷிப் வேண்டாம். சின்ன குழந்தைகளாக நீங்கள் சாட் செய்ய வேண்டாம். சாட்  செய்வதால் அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.  ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் தேவையில்லாமல் அதிகமாக மொபைல் வழியாக அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசவேண்டாம். 13 வயது 12 வயது பிள்ளைகளுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்களால்  சில நேரங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அம்மா, அப்பா இருவரும் இந்த காலத்தில் வேலைக்கு செல்வதால் குழந்தைகள்  பள்ளிகள் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொழுது கவனமாக இருங்கள். நம்முடைய தூரத்து சொந்தமான மாமாக்கள், தாத்தாக்கள் சில நேரங்களில் தேவையில்லாத இடங்களில் தொடலாம். அவர்களை அவ்வாறு தொடுவதற்கு அனுமதிக்காதீர்கள். அதனை உங்களது அம்மாவிடம் அவசியம் சொல்லுங்கள். பொதுவாக குழந்தைகள் அப்பாவிடம் பேசுவதைவிட அம்மாவிடம் அனைத்தையும் பேசுவார்கள்.  எனவே அம்மாவிடம் அனைத்து தகவலையும் கூறிவிடுங்கள். சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டு எங்களிடம் வரும் பொழுது மனசு வலிக்கிறது. குழந்தைகள் சிறுவர்களாக இருப்பதால் எளிதாக பிறரின் எண்ணங்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள். உங்களுக்கு அம்மா , அப்பாவிடம் சொல்ல தயக்கமாக இருந்தால் ஆசிரியர்களிடம் கூறிவிடுங்கள் .உங்களை நீங்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். நமக்கு எழுத்து அறிவித்த ஆசிரியர்கள் தான் கடவுள். அவர்கள் கூறுவதைக் கேட்டு வாழ்க்கையில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். என்று பேசினார்.நிகழ்வில் இணைய வழியில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும்,  பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வ மீனாள்,  முத்துமீனாள், முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் .

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற நிகழ்வில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திலகா  தலைமை தாங்கி இணைய வழியில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

 

வீடியோ 

  நம்முடைய தூரத்து சொந்தமான மாமாக்கள், தாத்தாக்கள் சில நேரங்களில் தேவையில்லாத இடங்களில் தொடலாம். அவர்களை அவ்வாறு தொடுவதற்கு அனுமதிக்காதீர்கள். அதனை உங்களது அம்மாவிடம் அவசியம் சொல்லுங்கள்.

 https://www.youtube.com/watch?v=zLII8ACO6fQ

 https://www.youtube.com/watch?v=SJ55HpefiVM

 

 

 

 

 

No comments:

Post a Comment