Thursday 23 September 2021

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் 

வட்டார வளர்ச்சி அலுவலர் வேண்டுகோள்

















 சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

தேவகோட்டை பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார் 

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.

                               கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் திறக்காத நிலையில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் உலர் உணவுப் பொருள்களை நேரடியாக பல மாதங்களாக  வழங்கப்பட்டு வருகிறது.  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் உலர் பொருள்களை தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி   வழங்கி பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் அரசு விலையில்லாமல் வழங்கக்கூடிய கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி போட்டுக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,கருப்பையா ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். மாணவர்களின்  பெற்றோர்கள்  அரசின் விதி முறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியில் நின்று உலர் பொருள்களை வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.


ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி   சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,கருப்பையா ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். 

 

வீடியோ 

 https://www.youtube.com/watch?v=1plQcKF0htY

 

 

No comments:

Post a Comment