Saturday 23 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

நீதிபதி கிருபாகரன் மதுரம் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

                   It is very proud to participate in this school programme. Mr.Chokklaingam Head Master arranged in well manner. This activities are higly appreciated. Likewise school teachers also co-operated and guided the students in well manner. Best wishes to aal the Teachers, staffs, and students and also to Correspondents. 

நீதிபதி. கிருபாகரன் மதுரம் 
Sub Judge,
Devakottai.
                           நீதிபதி கிருபாகரன் மதுரம் அவர்கள்  எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு மாணவர்களை பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.     


      


சட்ட விளக்க விழிப்புணர்வு முகாம் மூலம் நீதிபதிகள் அறிமுகம் :

                சுமார் ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பாக சட்டப்பணிகள் குழு தொடர்பான கருத்தரங்கு நடத்துவதற்காக எங்கள் பள்ளிக்கு நீதிபதி கிருபாகரன் மதுரம் அவர்களும், அவருடன் பணியாற்றக்கூடிய நீதிபதிகள் விஜயகுமார் அவர்களும், மோகனா அவர்களும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள். நீண்ட முயற்சிகளுக்கு பிறகு நீதிபதி கிருபாகரன் மதுரம் ஐயா அவர்கள் தலைமையிலான குழுவினர் சட்ட விளக்க முகாமை எங்கள் பள்ளியில் நடத்தினார்கள்.நிகழ்விற்கு வந்திருந்த நீதிபதிகள் எங்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகளை பார்த்துவிட்டு மிகவும் பாராட்டு தெரிவித்தார்கள் . 

மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்த நீதிபதிகள் :

                 மேலும் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில்கள் வழங்கினார்கள்.  தங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று கேட்டபோது, நீதிபதி அவர்கள் அதற்கு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்கள். அது  மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களும் மனநிறைவுடன் மாணவர்கள் நல்ல கேள்விகளை கேட்டு பதில்கள் தெரிவித்தார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள். இதுபோன்று மாணவர்கள் கேட்கும் தகவல்களை உள்வாங்கி சொல்லும் பள்ளி மாணவர்களை  தற்பொழுதுதான் தான் பார்ப்பதாகவும் , மாணவர்கள் உள்வாங்கி கூறக்கூடிய கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது என்றும் பாராட்டு தெரிவித்தார்கள். 

 ஒழுக்கம்,பணிவு,நேர்மை இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்- நீதிபதி :

                  தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிதிமன்ற  நீதிபதி கிருபாகரன் மதுரம் மாணவர்களிடம் பேசுகையில்,சட்ட படிப்பு படித்தால் நிறைய  வேலைகள் உள்ளன. இந்தியாவில் 15 சட்ட பள்ளிகள் உள்ளன.அவற்றிற்கு கிளாட் தேர்வு எழுதி சேரலாம்.தமிழ்நாட்டிலும் சட்ட கல்லூரிகள் உள்ளன.சட்ட படிப்பு படித்தால் ஐ.எ .எஸ்.,ஐ .பி.எஸ்.,வங்கி போன்ற பல்வேறு துறைகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு அமையும்.ஆசை பாடுங்கள்.ஆனால் பேராசைபடாதீர்கள்.ஒழுக்கம்,பணிவு,நேர்மை இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் .லஞ்சம் வாங்க கூடாது.நாம் செய்யும் வேலையில் தப்பு பண்ணக்கூடாது.நீதிபதிகள் பெரும்பாலும் விழாக்களில் பங்கு கொள்ள இயலாது.எங்களுக்கான வாழ்க்கை கோர்ட்,வீடு என்றுதான் இருக்கும்.பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம், இலவச சட்ட மையம் தொடர்பான சட்டம்,பொதுநல வழக்கு தொடர்பான தகவல்கள்,சட்டத்தின் அடிப்படை கூறுகளை விரிவாக விளக்கினார்.


 நீதிமன்றத்துக்கு களப்பயணம்  வாருங்கள் - நீதிபதி அவர்களின் அன்பான அழைப்பு :

             அதன் தொடர்ச்சியாக எங்கள் பள்ளி மாணவர்களை நீதிமன்றத்திற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைப்பு விடுத்து சென்றார்கள் . அதனை செயல்படுத்தும் விதமாக ஐயா அவர்களை தொடர்பு கொண்டு எங்கள் பள்ளி மாணவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றோம்.இப்பொழுதுதான் நீதிமன்றத்திற்குச் சென்று நானுமே பார்வையிட்டேன். இதுவரை நீதிமன்றத்தில் எப்படி உள்ளே செல்ல வேண்டும், வெளியே வர வேண்டும், நீதிபதி அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற விவரங்கள் எல்லாம் எனக்கு அப்பொழுது தான் தெரிந்தது. அது வரை எனக்கு அது தொடர்பான தகவல்கள் எதுவுமே தெரியாது. நீதிபதி கிருபாகரன் மதுரம் அய்யா அவர்கள் அவர்களுடைய அறையில்  மாணவர்களை காலை 9.50  மணிக்கெல்லாம் சந்தித்து பல்வேறு சந்தேகங்களுக்கு பதில்கள் வழங்கினார்கள். குறிப்பாக ஒரு மாணவர் கண்கள் கட்டிக்கொண்டு சினிமாக்களில் நீதி தேவதையே பார்த்துள்ளோம், அது போன்று இங்கு உள்ளதா என்று கேட்டார். அதற்கு தகுந்த  பதில்கள் ஐயா அவர்கள் அப்பொழுது எடுத்துக் கூறினார்கள். 

சட்டம் படியுங்கள் - பிரகாசமான வேலை வாய்ப்பு உள்ளது - நீதிபதி அறிவுரை ;

                நீதிபதிக்கு உள்ள பணிகள் குறித்தும், அவர்களுக்கு உண்டான வாழ்க்கை முறை குறித்தும் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். எனவே இங்கே வந்துள்ள மாணவர்க சட்டம் படியுங்கள் ,  சட்டம் படித்தால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கிறது, பல்வேறு துறை ரீதியான வேலை வாய்ப்புகளும் இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறினார்கள். 6,7,8 படிக்கும் மாணவர்கள் வாழ்க்கையில் முதல் முறையாக நீதிமன்றம் சென்று பார்வையிட்டார்கள். நீதிபதி அவர்களும் மிகவும் அன்புடன் பல்வேறு தகவல்களை கூறி காலை பத்து முப்பது மணிக்கு மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் செயல்பாடுகளையும் பார்ப்பதற்கு அனுமதி கொடுத்தார்கள். 

நீதிமன்றத்தை பார்வையிட்டது மறக்கமுடியாத நிகழ்வு :


                காலிங் எப்படி செய்வது, நீதிபதிகள்  முன்பாக வழக்கறிஞர்கள் எவ்வாறு வாதாடுவார்கள், எவ்வாறு மனு பெறப்படுகிறது, எவ்வாறு கோர்ட் நடைமுறையில் உள்ளது என்பதை எல்லாம் மாணவர்கள் மிகத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். நீதிமன்ற சிரசுதார் நீதிமன்றத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கும்  அழைத்துச் சென்று மாணவர்களுக்கு நீதிமன்றம் குறித்து விரிவாக விளக்கினார்கள் . அதற்கு முழு ஒத்துழைப்பு,உதவி நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களின் ஒத்துழைப்பு தான். நீதிபதி விஜயகுமார் அவர்கள், நீதிபதி மோகனா  அவர்கள் , ஆகியோரின் வாத, விவாதங்களையும் அவர்கள் முன்பான வழக்கறிஞர்களின் வாதங்களையும் மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர், பிறகு  இரண்டரை மணி நேரம் நீதி மன்றத்தில் இருந்துவிட்டு மீண்டும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றோம். நீதிபதி கிருபாகரன் மதுரம் ஐயா அவர்கள் மாணவர்களுடன் நன்றாக பழகினார்கள். நல்ல பல விஷயங்களை எடுத்துக் கூறினார்கள். நீதிமன்றம் செல்லும் பொழுதும் பல்வேறு மோட்டிவேஷன் தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு எடுத்து விளக்கினார்கள். அவர்களுடனான எங்கள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு என்பது மறக்க முடியாத ஒன்று. நீதிமன்றம் தொடர்பாகவும், பல்வேறு தகவல்கள் அறிவதற்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தினார்கள். நீதிமன்றத்திலும் அனைத்து பணியாளர்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நல்ல உதவி செய்தார்கள். 

நீதிமன்றத்தை நேரில் பார்த்து  அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்கிய நீதிபதி :

                எங்களது பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்றம் வந்த சென்றது குறித்து கூறும்போது, தங்களுக்கு 50 வயதுக்குமேல் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை நீதிமன்றத்தை பார்த்ததில்லை,  எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. எனவே இது ஒரு அருமையான வாய்ப்பு என்று தெரிவித்தார்கள். ஆறாவது, ஏழாவது, எட்டாவது படிக்கும் மாணவர்கள் நீதிமன்றத்தை பார்த்து, பள்ளியில் நீதிபதிகளை சந்தித்து, நீதிபதிகளின் அருகில் சென்று கேள்விகளை கேட்பது என்பது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. 

நன்றிகள் பல :


            இந்த நிகழ்வு உருவாவதற்கு அருமையான வாய்ப்புகளை வழங்கிய நீதிபதி கிருபாகரன் மதுரம் அவர்களுக்கும், மற்ற   நீதிபதிகளுக்கும் , நீதி துறை அலுவலர்களுக்கும்,  பணியாளர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி கலந்த அன்புடன் ,
லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,  
தேவகோட்டை.  
சிவகங்கை மாவட்டம். 
 8056240653

 நீதிபதி கிருபாகரன் மதுரம் அவர்கள்  எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வலைதளத்தில் காணலாம் :
https://kalviyeselvam.blogspot.com/2018/10/blog-post_12.html#more

https://kalviyeselvam.blogspot.com/2019/01/blog-post_9.html#more

 நீதிபதி கிருபாகரன் மதுரம் அவர்கள்  எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வீடியோவாக  காணலாம் :

 https://www.youtube.com/watch?v=mB9d4vlyEcE






No comments:

Post a Comment