Thursday 28 May 2020

அகில இந்திய வானொலியில் தொடர்ந்து 18 வாரங்கள் பள்ளி நிகழ்ச்சி ஒலிபரப்பு 






மாணவர்கள் மகிழ்ச்சி
பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி 

வானொலியில் ஒலிபரப்பு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு மணித்துளி போட்டி பள்ளி வளாகத்தில் இரண்டு மாதத்துக்கு முன்பு மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளர் சவித்ரா என்ற ராஜாராம் குழுவினரால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி அகில இந்திய வானொலி கொடைக்கானல் பண்பலை 100.5 ல்  சனிக்கிழமை தோறும் வருகின்ற வாரம் முதல் பகல் 12.30 மணிக்கும், அகில இந்திய வானொலி மதுரை பண்பலை 100.3 ல்  ஞாயிறு தோறும்  பகல் 12.02 மணிக்கும் தொடர்ந்து 18 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இளம் வயது மாணவர்களின்  பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல் ,கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போட்டியினை அனைவரும் கேட்கலாம் என்கிற தகவலை பள்ளியின் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.இப்போட்டியில் நடுநிலைப் பள்ளி அளவிலான மாணவர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு மணித்துளி போட்டி வரும் வாரம் முதல் தொடர்ந்து 18 வாரங்கள் அகில வானொலி மதுரை மற்றும் கொடைக்கானல் பண்பலையில் ஒலிபரப்பாக உள்ளது.இதற்கான நிகழ்ச்சி ஒலிப்பதிவு கடந்த சில  மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.




No comments:

Post a Comment