Friday 15 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

சப் கலெக்டர் ஆஷா அஜித் IAS   அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

Visited the school as part of National Voter's Day Celebration. The school is celebrating Voter's Day for five years consequently by organising 'கோல போட்டி '. The students are well trained , confident and the HM and teacers are taking all efforts for the betterment of the studnets and the school.Best wishes for the journey ahead. வாழ்த்துக்கள் !

Ashe Ajith, IAS.
Sub - Collector, Devakottai.


                              Attended the Dengue Awarness program @ Chairman Manikca vasagam School,Devakottai. Was a diferent experience wherein students involvement in preparing the exhibits for the exhibition arranged as part of the program could be seen and also was extremely happy to see the level of awarness among the students. Continue the work. Best wishes for the team.


Ashe Ajith, IAS.
Sub - Collector, Devakottai.








                          சப் கலெக்டர் ஆஷா அஜித் IAS  அவர்கள்  பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.

பொதுமக்களின் கோலங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு தேர்ந்தெடுத்த IAS :

                         சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சப் கலெக்டராக பணியாற்றியவர் ஆஷா அஜித் IAS அவர்கள். எங்கள் பள்ளிக்கு   தேசிய வாக்காளர் தின விழாவிற்கு வந்திருந்தார்கள்.பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி போட்டிகள் வைத்து, மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் வைத்து , தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்  தேவகோட்டை சப் கலெக்டர் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து நிகழ்வு நடத்தி வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக ஆஷா அஜித்தை ஐஏஎஸ் அவர்களை நிகழ்வுக்கு அழைத்திருந்தோம்/ ரங்கோலி போட்டியில் பங்கேற்றவர்களில் வெற்றி பெற்ற பொதுமக்களையும்,மாணவர்களையும் தேர்ந்தெடுத்து பரிசுகளையும் வழங்கினார்கள் . ஆர்வத்துடன் கோலங்களை பார்வையிட்டு பரிசுக்குரிய கோலங்களை அவர்களே மதிப்பெண் வழங்கி தேர்ந்தெடுத்தார்கள்.

இரண்டு மணி நேரத்துக்குமேல் மாணவர்களுடன் கலந்துரையாடிய IAS:


                   மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். மாணவர்களிடம் மிக இயல்பாக கலந்துரையாடல் நடத்தினார்கள். மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பல்வேறு தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். இளம் வயதில் நேரடியாக ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற ஒரு அதிகாரியுடன் மாணவர்கள் கலந்துரையாடுவது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஐஏஎஸ் ஆவது எப்படி, எப்படி எல்லாம் நம் கல்வி முறையை படிக்கலாம், தனது இளமை கால கல்வி முறைகள் என்ன என்பதையெல்லாம் ஆஷா அஜித் IAS அவர்கள் மிக இயல்பாக மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள். ஆஷா அஜித் அவர்களை நேரில்   மாணவர்கள் சந்தித்த கேள்விகள் கேட்டு பதில்களை பெற்றுக்கொண்டனர். பல்வேறு புதிய தகவல்களையும் தெரிந்து கொண்டனர். மாணவர்களுடன் கலந்துரையாடி விட்டு தலைமை ஆசிரியர் அறையில், என்னிடம் மாணவர்கள் சொன்ன கருத்துக்களை உள்வாங்கி மீண்டும் கூறுகிறார்கள். மிகவும் சிறப்பாக இருந்தது . மாணவர்கள் அனைவரும் அருமையாக இருக்கிறார்கள் என்று பாராட்டு தெரிவித்தார்கள் . 

இரண்டு முறை பள்ளிக்கு வருகை தந்த IAS அவர்கள் :

        பிறகு இரண்டாவது முறையாக அவர்களை டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அழைத்திருந்தோம். தமிழ்நாட்டில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியை நாங்கள் தான் எங்கள் பள்ளியில் முதலில் நடத்தினோம் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.  டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி முகாமை ஆஷா அஜித் IAS அவர்கள் திறந்துவைத்து, மாணவர்களிடம் டெங்கு விழிப்புணர்வு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். அன்றைய தினம் இரண்டு நகராட்சி மருத்துவர்கள் வந்து மாணவர்களின்  சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார்கள். 

மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த IAS :

                டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியை மிக ஆர்வத்துடன் பார்வையிட்டு, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் இயல்பாக கலந்துரையாடினார்கள். பிறகு மாணவர்களிடம்  டெங்கு விழிப்புணர்வை பொதுமக்களிடம் எப்படியெல்லாம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் விளக்கிக் கூறினார்கள். அப்பொழுது மாணவர்கள் ஆஷா அஜித் அவர்கள் பேசியதை உள்வாங்கி கூறிய தகவல்களை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். பள்ளி மிக அருமையாக இருப்பதாக என்னிடம் பாராட்டு தெரிவித்தார்கள். தற்பொழுது தமிழகத்தின் வேறு ஊரில் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்கள். இருந்த போதிலும் அவர்கள் உடனான தொடர்புகள் தொடர்ந்து இருந்து வண்ணமிருக்கின்றன.  ஆஷா அஜித் IAS அவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து சுமார் இரண்டரை மணி நேரம் மாணவர்களுடன் கலந்துரையாடி  மாணவர்களை பாராட்டிய தகவலும், மாணவர்களும் மிக இயல்பாக  ஐஏஎஸ் அவர்களை சந்தித்து பல்வேறு தகவல்களைக் கேட்டுக்கொண்ட தகவலும் பாராட்டுக்குரியது. 

நன்றிகள் பல :

                             சப் கலெக்டர் ஆஷா அஜித் IAS அவர்கள் பல்வேறு பணிகளுக்கு இடையில் நேரத்தை ஒதுக்கி இரண்டு முறை பள்ளிக்கு வருகை புரிந்ததற்கும் , ஒத்துழைப்பு நல்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றி கலந்த அன்புடன் ,

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம். 8056240653 


சப் கலெக்டர் ஆஷா அஜித் IAS அவர்கள்  பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வலைத்தளத்தில் காணலாம் :

https://kalviyeselvam.blogspot.com/2018/10/blog-post_27.html#more

https://kalviyeselvam.blogspot.com/2018/01/25.html#more



சப் கலெக்டர் ஆஷா அஜித் IAS  அவர்கள்  பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வீடியோவாக காணலாம் :

https://www.youtube.com/watch?v=uYksIWswCDs

https://www.youtube.com/watch?v=Nc-EEgLE9Ws

https://www.youtube.com/watch?v=7Djbx-LSSXc

https://www.youtube.com/watch?v=GLLpfcXP-sg

https://www.youtube.com/watch?v=WYPQQKiWIcc

https://www.youtube.com/watch?v=2oSJmT2vHkY

https://www.youtube.com/watch?v=srZmQA480dM


https://www.youtube.com/watch?v=SU07VDiftbM








No comments:

Post a Comment