Wednesday 20 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

சப்-கலெக்டர் ஆல்பி ஜான் IAS அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

                                                                                                 Dr.Alby John IAS,
                                                                Sub Collector, DVK

                   It was a pleasure to visit this school and I am happy to see that the teachers are organising a lot of  creative event for the student . keep it up
                                                                                                Dr.Alby John IAS,



                                                                                               
                                              
                                                                          சப்-கலெக்டர் ஆல்பி ஜான் IAS அவர்கள்  பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி மாணவர்கள் தொடர்பாக பாராட்டி எழுதிய வரிகள் :   


மாணவர்களின் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்த IAS :                   

                     தேவகோட்டை சப் கலெக்டராக இருந்த ஆல்பி ஜான் IAS அவர்களை தேசிய வாக்காளர் தின நிகழ்வுக்கு வருகை தருமாறு அழைக்க சென்று சந்தித்தேன். நிகழ்வு நடைபெறும் நாளுக்கு இரு வாரங்களுக்கு முன்பாக அவர்களை சென்று சந்தித்தேன். அப்போது ஒரு வாரம் முன்பாக எனக்கு ஞாபகப்படுத்து. முதல் நாள் ஞாபக படுத்தும்போது  நான் பள்ளிக்கு வருகை தருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.ஆல்பி ஜான் IAS அவர்கள் காலை ஒன்பது முப்பது மணிக்கு எல்லாம் பள்ளிக்கு வந்து பெற்றோர்கள் வரைந்திருந்த ரங்கோலி ஓவியப் போட்டியை பார்த்து மதிப்பிட்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து, பரிசுகளை வழங்கினார். மாணவர்களுடைய காலை வழிபாட்டு கூட்டத்தையும் பார்த்து , மாணவர்களுடன் இணைந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மிக எளிமையாக புரியும் வகையில் பதில்களை தந்தார்கள்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது பரிசு பெற்றதை நினைவு கூர்ந்து மகிழ்ந்த IAS:

                   அவர்களுடைய பள்ளி கால நினைவுகளை நினைவு படுத்தினார்கள். தான்  கேரளாவில் நான்காம் வகுப்பு படிக்கும் போது இது போன்ற ஒரு ஐ ஏ எஸ் ஆபிஸர் வந்ததாகவும் , அவரிடம்தான் பரிசு பெற்ற தகவலையும் நினைவுகூர்ந்து மகிழ்ந்தார். அரசு பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் படிக்க வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொண்டார். ஐ.எ .எஸ்., ஐபிஎஸ் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார். அனைவருடைய குறிக்கோளும் என்ன என்று கேட்டுக்கொண்டார். பின்பு தலைமை ஆசிரியர் அறைக்கு வந்து என்னிடம் பேசும்பொழுது, உங்கள் இருக்கையில் நீங்கள் அமருங்கள்,  நான் உங்கள் முன்னால் அமர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். அது மறக்க முடியாத ஒரு நிகழ்வு .பிறகு பள்ளி தொடர்பாக பல்வேறு விஷயங்களை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார்கள். 

 இரண்டாவது முறையாக பள்ளிக்கு வருகை தருதல் :

                   சரியாக ஒரு வருடம் கழித்து ரூபெல்லா தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைப்பதற்காக மீண்டும் பள்ளிக்கு வந்து இருந்தார்கள். அப்பொழுது மாணவர்களிடம் பல்வேறு  ரூபெல்லா தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். அன்னார் அவர்கள் மருத்துவர் என்கிற காரணத்தினால், பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கும் விளக்கிக் கூறினார்கள். பின்பு மாணவர்களுடைய விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கி வைத்துப் பேசினார்கள். இந்த  இரண்டு நிகழ்வும் எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வுகள் ஆகும். ஒரு நேரடி IAS அவர்கள் மாணவர்களுடன் வந்து கலந்துரையாடி எப்படியெல்லாம் ஐஏஎஸ் ஆவது, எப்படி எல்லாம் நம் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிற தகவலை பகிர்ந்து கொண்டார்கள். இன்றளவும் அவருடன் தொடர்பில் இருக்கின்றோம்.

நன்றிகள் பல :

              அருமையான வாய்ப்புகளை வழங்கி ஆல்பி ஜான் IAS அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் . உதவிய நல் உள்ளங்கள், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.



நன்றி கலந்த அன்புடன் ,

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம். 8056240653
 சப்-கலெக்டர் ஆல்பி ஜான் IAS அவர்கள்  பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை பள்ளி வலைத்தளத்தில் காணலாம்: 

https://kalviyeselvam.blogspot.com/2016/01/blog-post_25.html#more


https://kalviyeselvam.blogspot.com/2017/02/blog-post.html#more



No comments:

Post a Comment