Saturday 23 May 2020





நண்பர்களே இன்று  ஒரு செய்தி படித்தேன். எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.ஆசிரியருக்கு மாணவர்கள் உதவி என்கிற செய்தியை படித்தவுடன் என் மனது மிகவும் வலித்தது. ஆசிரியருக்கு மாணவர்கள் உதவியா என்று ஆச்சரியத்துடன் அந்த செய்தியைப் படித்தேன். ஊர் ,ஊராக சென்று மாணவர்களுக்கு நாடகங்களை கற்றுத்தரும் ஆசிரியர் செல்வம்.ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருப்பதால் மதுரை  அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து மாணவர்கள் உதவி செய்ததாக அந்த நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. என்னுள் மிகப்பெரிய வருத்தத்தையும்,அதிர்ச்சியையும் இந்த செய்தி ஏற்படுத்தியது. ஆசிரியர் செல்வம் அவர்களை எனக்கு நன்றாக தெரியும். சேவை மனப்பான்மையுடன் பல்வேறு ஊர்களுக்கும் சென்று மாணவர்களுக்கு குறிப்பாக அரசு பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகளை நாடகங்கள் மூலமாக வழங்கிய நல்வழிப்படுத்தி வருபவர். முகநூலிலும் பல்வேறு புதிய மாற்று சிந்தனைக்கு உரிய தகவல்களை பகிர்ந்து வருபவர். அவருக்கு இது போன்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்னார்  அவர்களை சிறிது நேரத்திற்கு முன்பு தொலைபேசியில் அழைத்து பேசினேன். என்ன உதவி என்னால் முடியுமோ அதை செய்கிறேன் என்று கூறினேன். வேண்டவே வேண்டாம் சார். தற்போது எனக்கு எதுவும் தேவை இல்லை .ஆனால் ஒரு வருத்தத்திற்குரிய விஷயம் பல பள்ளிகளுக்கு சென்று இருக்கின்றேன். ஒரு சிலர் தான் என்னை அழைத்து கூட பேசுகிறார்கள். பலரும் இதுபற்றி என்னிடம் எதுவும் கேட்கக் கூட இல்லை என்று வருத்தப்பட்டார். அவர் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் வேலை பார்த்து அங்கே கிடைக்கும் சம்பளத்தை பெற்றுக் கொண்டு அந்த சம்பளத்திலிருந்து தனது சுய முயற்சியாக பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கும் சென்று நாடகங்கள் மூலம் மாணவர்களை நல்வழிப் படுத்தி வருகிறார். அந்த தனியார் பள்ளிகள் தற்பொழுது உங்களின் தேவை எங்களுக்கு இல்லை என்று கூறி சம்பளமும் இல்லை என்று கூறிவிட்டார்களாம். எனவேதான் இந்த நிலைக்கு, நானும் எனது குடும்பமும் தள்ளப்பட்டோம் என்று தெரிவித்தார். எங்கள் பள்ளிக்கும் அன்னார்  அவர்கள் வந்து மாணவர்களுக்கு நாடக  பயிற்சி வழங்கி உள்ளார்.அப்பொழுது தான் வாழ்க்கையில் எவ்வளவு சிரமப்பட்டு படித்து,  பல நாட்கள்  சாப்பாட்டுக்கு கூட சிரமப்பட்டு வாழ்க்கையில் இந்த நிலைக்கு வந்துள்ளது தொடர்பாக கூறியதை கேட்டு எங்கள் பள்ளி மாணவர்கள் பலரும் அழுதே விட்டார்கள். அப்பொழுது மாணவர்கள் ஆசிரியர் செல்வம் அவர்களிடம் ,  நாங்கள்தான் கஷ்டப்படுகிறோம் என்று நினைத்தோம். ஆனால் எங்களை விட சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படக் கூடிய நிலையில் தாங்கள் இருந்து,படித்து வந்தது எங்களுக்கு மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும்  இருக்கிறது என்று கருத்துக்களை பதிவு செய்தார்கள். அந்த நிகழ்வை தற்பொழுது அன்னார்  அவர்களிடம் நினைவுபடுத்தினேன். மிகுந்த வருத்தமாக இருந்தது. எந்த உதவி தேவை என்றாலும் அவசியம் என்னை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளேன்.
                            அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக நாடகம் வாயிலாக ஒத்துழைப்பு நல்கி வரும் ஆசிரியர் செல்வம் அவர்கள் துன்பம் நீங்கி நல்லது நடக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.அன்னாரது செல் எண் : 98943 53838

நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் ,


லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.







No comments:

Post a Comment