Friday 19 April 2019

அம்மா எப்போமா வருவீங்க ? வருத்தத்துடன் ஒரு குழந்தையின் ஏக்ககுரல் 

பெண் ஆசிரியரின் தேர்தல் பணியின் வேதனை அனுபவம் 

வயதுக்கு வந்து இரண்டே நாளில் பெண்பிள்ளையை எப்படி தனியே விட்டு செல்வது ?

                       எனது நண்பி பெண் ஆசிரியை வேதனை :                       
தேர்தல் ஆணை பெற்று தேர்தல் பணிக்கு செல்லும் ஒரு நாள் முன்பாக என்ன செய்வது என்று தெரியவில்லை.எங்கள் மகள் வயதுக்கு வந்து விட்டாள் .இரண்டு நாள்கள்தான் .தனியே விட்டு செல்லவும் இயலவில்லை.எனது கணவரும் தேர்தல் பணியில் இருந்தார்.எனது உறவினர்களை கெஞ்சி கேட்டு எனது மகளை அவர்களிடம் விட்டு சென்ற வேதனை வாழ்நாளில் மறுக்க முடியாது.எவ்வளவோ எடுத்து சொல்லியும் எனது பணியை பார்த்தே ஆகவேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.எனது மகள் என்னை மன்னிப்பிளா ?


அம்மா எப்பம்மா வருவா ? குழந்தையின் வேதனை குரல் :

நங்கள் பணிக்கு வந்ததே பகல் நேரத்துக்குத்தான் : ஆனால் இரவு நேரம் இரண்டு நாள் எப்படி பணியேற்று பார்ப்பது எப்படி? எங்கள் குழந்தையை இரவு நேரத்தில் யார் பார்த்துக்கொள்வார்கள் ?
                                             என்னத்த சொல்ல நண்பர்களே.எனது நான்கு வயது குழந்தையை எனது உறவினர் ஒருவர் வீட்டில் விட்டு விட்டு வந்தேன்.முதல் நாள் மாலை முதல் குழந்தையின் வேதனை குரல்.அம்மா ,எப்போது வருவாய் என்று? அய்யா , நாங்கள் பணியில் சேரும்போது இரவு முழுவதும் குழந்தைகளை விட்டு,விட்டு 100 கிலோமீட்டர் தாண்டி பணியேற்று பார்ப்போம் என்று எங்கும் சொல்லவில்லை.பகலில் எவ்வளவு பணி வேண்டுமானாலும் பார்க்கலாம்.ஆனால் இரவு நேரத்தில் எங்கள் இளம் வயது பிள்ளைகளை விட்டு விட்டு,வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை விட்டு,விட்டு எவ்வாறு பணியாற்ற இயலும் ? சொல்லுங்கள் நண்பர்களே. இரவு நேர பணியினை தவிர்ப்போம்.

சில பெண் ஆசிரியர்களின் வேதனை குரல்கள் :

நடு வழியில் ,நடு இரவில் நிற்கதியை நின்ற வேதனை :

             ஐயா எங்கள்  தேர் தல் பணிமுடிந்துஉஊர்திரும்பும்போதிய பேருந்துவசதியில்லாததால்ஒக்கூரில் உள்ளேஆரம்பப்பள்ளியில்தங்கும் எண்ணத்தில் அங்கு சென்றோம் அப்போது அங்கு தேர்தல்பணிமுடியவில்லை அப்போது மணிஇரவு12 அங்குள்ள பள்ளி காவலர்எங்களைதங்க அனுமதிக்கவில்லை பறகு2மணிக்கு கட்டாயப்படுத்தி எங்களைவெளியேற்றினார்பெண்ணாசிரியர் இருவரும்என்னசெய்வதுஎனதெரியாமல்வழிப்போக்கர்அங்குள்ள
மேல்நிவைப்பள்ளியில் தங்கம்படிஆலோசனைகூறியதன்பேரில்அங்கேதங்ககினோம் தேர்லல்பணிக்குசெல்வோர்க்குபாதுகாப்பும் மனிதாபிமானமும் எப்படிஉள்ளதுஎன பாருங்கள்

வேதனையான பயணத்தை பேருந்து நிலையத்தில் பாருங்கள் :
                                   தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு, தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு திருவிழா மாதிரி தான் நாங்கள் சந்தோஷமாக பணி செய்வோம் ஆனால் பெண் ஆசிரியர்களை 100 கிமீ, 150 கிமீ தூரம் அனுப்பி 2 ஆசிரியர்களை கொன்று விட்டீர்கள் எங்களுக்கு பணம் தேவையில்லை பாதுகாப்பு தான் முக்கியம் எங்கள் பிள்ளைகள், குடும்பத்திற்கு நாங்கள் தேவை. எங்களை இப்படி கொடுமை படுத்த வேண்டாம் இன்று இரவு ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் சென்று பாருங்கள் எங்களை படுத்தின பாடுகளுக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். பகிருங்கள் ஆசிரியர்களே




சதுரங்க வேட்டை விளையாட்டு:

PO -₹,5000/-
PO1-₹,4000/-
PO2 -₹,3000/-
PO3 -₹,3000/-

Game விளையாடி அனைவரும் தேர்தல் பணியில் போகாதவர்களும் தேர்தல் பணிக்கு ஆர்வம் ஏற்பட்டு முதல் பயிற்சி கலந்துகொண்ட பிறகு தெரிந்தது இது சதுரங்க விளையாட்டு என்று...

பல இன்னல்களுக்கு பிறகு தற்போது வாங்கியது!

PO -₹,1700/-
PO1-₹,1300/-
PO2-₹,1300/-
PO3-₹,1300/-


என்ன கொடுமை சார் இது ?

                      தேர்தல் திருவிழா என்று சொல்வது நன்றாகத்தான் உள்ளது .ஆனால் திருவிழா கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு அல்லல்படும் ஆசிரியர்களையும்,அரசு ஊழியர்களையும் நினைத்தால் தான் வேதனையாக உள்ளது.

பூத் சிலிப்பு இல்லாமல் அவதிப்பட்ட மக்கள் :
                                எங்களிடம் வரும்போது வரிசை எண் சொன்னால்தான் எளிதாக பெயர் பார்க்க முடியும்.ஆனால் எங்களிடம் அதுபோன்று பூத் சிலிப் இல்லை என்றும்,வரிசை எண் தெரியாது என்றும் வருத்தத்துடன் சொன்னவர்களை பார்க்கும்போது எங்களுக்கும் வருத்தம்தான்.என்னத்த சொல்ல ? அடிப்படை விழிப்புணர்வுகூட மக்களிடம் இல்லையே என்று.



இந்த வருது! அந்த வருது! எங்க,எங்க ?
                                   என்னவென்று கேட்கிறீர்களா ?  தேர்தல் நாளைக்கு முதல் நாளே அனைவரும் வந்து விடுங்கள்.உங்களை அழைத்து செல்ல பஸ் தயாராக இருக்கும் என்றார்கள்.ஆனால் கடைசி வரை பஸ் வரவேயில்லை.இந்த வருது,வந்துகொண்டே உள்ளது என்றார்கள்.ஆனால் கடைசி வரை பேருந்து வரவில்லை.பெண்ணாகிய நான் செல்ல வேண்டிய இடத்துக்கு பேருந்து பிடித்து ( முன் பின் தெரியாத ஊருக்கு ) அங்கிருந்து பேருந்து இல்லாத குறிப்பிட்ட ஊருக்கு 200 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டியது இருந்தது.ஆட்டோக்காரர் நல்லவராக இருந்ததால் அந்த ஊருக்கு சரியாக கொண்டு போய் விட்டார்.இல்லை என்றால் நானும் இன்று பிறர் அனுதாப படும் நிலைக்கு சென்று இருப்பேன்.ஆனால் கடைசி வரை பேருந்து தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுப்பபடவே இல்லை.

ஒட்டு போட்ட ஆளை பிடிப்பா ? ஏம்பா ?
                                              வோட்டு போடும் மெஷின் தொடர்பாக அதிக தெளில்லாமல் வந்த மக்கள் ,பட்டனை அழுத்துவதற்கு பதிலாக பக்கத்தில் உள்ள பகுதியில் (பொத்தானில்)   விரல்  வைத்து அழுத்தி விட்டு வேகமாக சென்று விட்டார்கள்.முன்பெல்லாம் மெசினை தொட்டு அழுத்தின உடனே சத்தம் கேட்கும்.இப்போது சில  வினாடிகள் அழுத்தி பிடிக்க வேண்டி உள்ளது.இது தெரியாமல் சிலர் சென்று விட அவர்களை விரட்டி பிடித்து சரியாய் வோட்டு போடா வைப்பதுற்குள் போதும்,போதும் என்று ஆகிவிட்டது.தேர்தல் விழிப்புணர்வு இன்னும் அதிக அளவில் கொடுத்து இருக்கலாம்.


வோட்டு போடும் வரை உணவு கொடுத்த உதவியாளர்கள் தேர்தல் முடிந்த மாலை ஆனபிறகு தேனீர் வாங்கி கொடுக்க கூட ஆளில்லை ?
                                                          சுமார் 12 மணிநேரத்துக்கு மேல் பணியாற்றி விட்டு ( எட்டு மணி நேரம்தான் தொழிலார்கள் பணி  நேரம்) மாலை ஆனால் தேனீர் வாங்கி கொண்டு வரக்கூட ஆளில்லை.இரவு உணவும் இல்லாமல் சக்கரை வியாதியுடன் அவதிப்பட்ட வேதனை தாங்க முடியாதது.

நேரத்தினை நெறிப்படுத்த வேண்டும் :
                                              எட்டு மணி நேரம் என்ற நிலை மாறி காலை 5 மணிக்கு ஆரம்பித்து ஓய்வே இல்லாமல் ,சாப்பிட கூட இயலாமல் வேலை பார்த்து மாலை 7 மணிக்கு அப்பாடா என்று கொஞ்ச நேரம் இருந்தால் இரவு உணவும் வராது . 

இந்தா வர்ற,அந்தா வரார் ? எப்போது வருவார் ? 
                                ஆவலுடன் பெட்டி எடுக்க சோனல் எப்போது வருவார் என்று எண்ணி கொண்டு இருந்தால் இரவு 3 மணி வரை யாரும் வருவதில்லை.இதோ வருவார்,அதோ வருவார் என்று சொல்லி அதனால் தூக்கமும் இல்லாமல் அதன் பிறகு 3 மணிக்கு பெட்டி கொடுத்து கிளம்பலாம் என்றால் பேருந்து இல்லாத ஊரில் எப்படி கிளம்புவது.நம் உடன் இருந்தவர்கள் அலுப்பின் காரணமாக கிளம்பி விட ,வீட்டுக்காரரின் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் சுமார் 30 கிலோமீட்டற்கு மேல் அபாயகரமான பயணம் செய்து உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்தால் உண்டு.வழியில் எது நடந்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.எனது பணியிடத்துக்கும் ,தேர்தல் பணியிடத்துக்கும் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் ஆகும்.

3 பூத்துக்கு ஒரு சோனல் என்று வைத்தால் என்ன ?
                                              10 பூத்துக்கு ஒரு சோனல் என்பது கொடுமையான விஷயம்.இதனை மாற்றி 3 பூத்துக்கு ஒரு சோனல் என்று வைத்தால் நல்லது.அதனை விட்டு விட்டு இரவு உணவும் இல்லாமல் சிரமப்பட்டு நொந்து நூலாகி உள்ளோம்.தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் பல கிலோமீட்டர் தாண்டி வேலைக்கு சென்று பலதரப்பட்ட நிலைகளை தாண்டி இந்த பணிக்கு செல்வது அவதியான விஷயம்.

 பணிக்கு செல்லும்போதும்,மீண்டும் செல்லும்போதும் பேருந்து ஏற்பாடு செய்து கொண்டு போய் சேர்த்தால் நலம்.

பணியின்போது சாப்பிடுவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கினால் நலம்.

இல்லை,இல்லை,இல்லை ?

தேர்தல் நடக்கும் நாளன்று காலை பணிக்கு சென்றால் நலம்.நாங்கள் பணிக்கு செல்லும் பல இடங்களில் அடிப்படை வசதிகூட இல்லை.கழிவறை வசதி இல்லை.12 மணி நேரத்துக்கு மேல் அமர்ந்து இருக்க எங்களுக்கு சரியான இருக்கை வசதி இல்லை.சரியான இருக்கை வசதி இல்லாமல் எப்படி 12 மணி நேரம் அமர்ந்து பணியாற்ற இயலுமா? என்ன கொடுமை சார் இது ?



                                 இதையல்லாம் படித்து விட்டு நீங்களும் அப்படியே சென்று விடுவீர்கள்.நானும் சில நாட்களில் மறந்து விடுவேன்.மீண்டும் பணிக்கு செல்வோம்.மீண்டும் எழுதுவோம்.மீண்டும் பார்வர்ட் செய்வோம். உயிருக்கு பயந்து நடு இரவில் பயணம் செய்வோம்.அவ்வளவுதான் .என்ன கொடுமை சார் இது ?
மாற்றத்தை ஏற்படுத்த நாமும் முயல்வோம் ?.

No comments:

Post a Comment