Thursday 4 April 2019

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 
முதல் வகுப்பில் மாலை மரியாதையுடன் 
 மாணவர்கள் சேர்ப்பு 






 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசு உத்தரவின்படி மாலை மரியாதையுடன்  மாணவர்கள் முதல் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கியது.

                              2019 - 20ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, ஏப்., 1ம் தேதி முதல் துவங்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.பள்ளி கல்வித்துறையின் உத்தரவுப்படி, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.
                                            புதியதாக சேர உள்ள  மாணவர்கள் மாலை மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு முதல் வகுப்பிற்கான சேர்க்கை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.புதிய மாணவர்களுக்கு ஆத்திசூடி,திருக்குறள் ஆகியவைற்றை எட்டாம் வகுப்பு மாணவர்களால் சொல்ல சொல்லி பயிற்சி அளிக்கப்பட்டது.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.மாலை மரியாதையுடன் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது பெற்றோர்களுக்கும்,மாணர்வர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஏராளமான பெற்றோர்களும்,பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 
முதல் வகுப்பில் மாலை மரியாதையுடன் 
 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.






No comments:

Post a Comment