Monday 1 April 2019

பி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் வெற்றிக்கு 
பள்ளி மாணவர்கள் பாராட்டு



 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                                பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது. உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் எடை 436 கிலோ ஆகும். ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு   வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment