Sunday 14 April 2019

திசைகள்  விருது வழங்கும் விழா

தேவகோட்டை - அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு சார்பாக  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.




                                                       திசைகள் குழு தினேஷ் வரவேற்றார். மாற்றத்திற்கான மந்திரங்களாகவும், ஆரோக்கியமான அறிவார்ந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கி, தேச நலனிலும் சமூக நலனிலும் தங்களையே மெழுகுவர்த்திகளாய் உருக்கிக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக மட்டுமன்றி உண்மையில் சமூகவியலை  கற்பித்து, ஆசிரியப் பணியை உயிர்ப் பணியாக நினைத்து வாழும் ஆசிரியர் சி.ஜெ.ஆர். மணி பெயரிலான சிறப்பு விருதினை திசைகள் குழு நல்ல முகமது தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு  வழங்கினார்.திசைகள் குழுவின் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி பேசும்போது : அறந்தாங்கியில் 2005 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக தொடங்கப்பட்ட திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, 13 வருடங்களாக அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் மட்டுமே சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது.14ம் ஆண்டான இந்த ஆண்டு முதன் முறையாக தன் மாவட்டமான புதுக்கோட்டை தாண்டி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.அறந்தாங்கியில் விருது வழங்கும் விழா நடைபெற்றபோது உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரால் வர இயலவில்லை.உங்கள் பள்ளிக்கு எங்களை ஈர்த்து அழைத்து வந்துவிட்டார் பள்ளி தலைமை ஆசிரியர்.வாழ்த்துக்கள் என்று பேசினார்.நிறைவாக திசைகள் குழு திட்ட இயக்குனர் யாஸ்மின் ராணி நன்றி கூறினார்.

பட விளக்கம் : அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு சார்பாக  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.அறந்தாங்கி ஆசிரியர் சி.ஜெ.ஆர். மணி பெயரிலான சிறப்பு விருதினை திசைகள் குழு நல்ல முகமது தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு  வழங்கினார்.திசைகள் குழுவின் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
                                                                 

No comments:

Post a Comment