Friday 12 April 2019

தேவகோட்டை  நடுநிலைப்  பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 

வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதே கல்வி

 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்ப்பதுதான் கல்வி

ஒளியேற்றுதல் விழா என்பது புதுமையான நிகழ்ச்சி

மேனாள் பல்கலைக்கழக  துணைவேந்தர் பேச்சு 







தேவகோட்டை ​ ​ - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.தொடர்ந்து ஆறாம்  ஆண்டாக இவ்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
                             
                   விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம்  வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.ஆசிரியை முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.மாணவிகளின்   அபிராமி அந்தாதி,திருக்குறள் நடனம் நடைபெற்றது. தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை இணை செயலர் ஆதிரெத்தினம் முன்னிலை வகித்தார்.அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார் .மாணவியர் கல்விகடவுள் சரஸ்வதியை வணங்க  பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை தொடர்ச்சியாக எட்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.எட்டாம்  வகுப்பு மாணவர் கார்த்திகேயன்   உறுதி மொழி வாசிக்க எட்டாம்  வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு தீப  ஒளியை  ஏழாம்  வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில்  மாணவர் அய்யப்பன் ஏற்புரை வழங்கினார்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்    நன்றி கூறினார்.விழாவில் மாணவ,மாணவியரின் நாடகம்,திருக்குறள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ ,மாணவியர் பிரியா விடை பெறும் விழாவில்  ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவ ,மாணவிகளிடம் வழங்கினார்கள். அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார்.தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை இணை செயலர் ஆதிரெத்தினம்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.














மேலும் விரிவாக :

இந்த பள்ளியினை விட்டு போவதற்கு எனக்கு அழுகையை இருக்கு - எட்டாம் வகுப்பு மாணவியின் கண்ணீர் பேச்சு

வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதே கல்வி
மேனாள் துணைவேந்தர் பேச்சு





                                                விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் சுப்பையா தலைமை தங்கினார்.தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை இணை செயலர் ஆதிரெத்தினம்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.8ம் வகுப்பு மாணவி நித்திய கல்யாணி பள்ளியில் கடந்த ஓராண்டு காலத்தில் நடந்த நிகழ்சிகள் குறித்து பேசினார்.

மேனாள் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசியதவாவது :

புதுமையான நிகழ்ச்சி :

    ஒளியேற்றுதல் விழா என்பதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.இது ஒரு புதுமையான நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்திய தலைமை ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.அனுபவம் வாய்ந்த கல்வியே சிறந்த கல்வி ஆகும்.நீங்கள் வங்கி ,பல்கலைக்கழகம்,வேளாண்மை கல்லூரி,கோர்ட்,பாஸ்போர்ட் அலுவலகம்,கல்லூரி,தபால் அலுவலகம்,வேளாண்மை பண்ணை போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று அனுபவ அறிவு பெற்று உள்ளீர்கள்.நேரடி அனுபவம் மூலமே சிறந்த கல்வியை பெற இயலும்.அதனை உங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.அதன் மூலம் அனுபவம் வாய்ந்த கல்வியை உங்களுக்கு அளிக்கிறார்கள்.

வாழக்கை,கல்வி இரண்டும் முக்கியம் :

                           வாழக்கை, கல்வி இரண்டும் முக்கியமானது.கல்வி என்பது மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பது ஆகும்.மனதிடம்,உடவலிமை ,உணர்வு பூர்வமாக செயல்படுவது ஆகும்.விட்டுக்கொடுத்து வாழ்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்ப்பதுதான் கல்வி .

புத்தகம் படித்தால் வாழ்க்கை வசப்படும் :
 
                            மற்றவர்களை நேசிக்க தெரிந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.மனதை பக்குவப்படுத்தினால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.மனதை பக்குவப்படுத்த இசை கேட்டல்,நல்லவரோடு பழகுதல்,மற்றவர்களை அன்பாக நடந்து கொள்ளுதல்,புத்தகம் வாசித்தல் ஆகும்.மகிழ்ச்சியாக இருக்க புத்தங்களை வாசிக்க வேண்டும்.படிப்பது மூலம் அறிவையும்,அனுபவங்களையும் பெற முடியும்.நான் 10 புத்தகத்தில் உள்ள கருத்துக்களை 5 நிமிடத்தில் கூறிவிடுவேன் .அதற்கு காரணம் புத்தகம் வாசிக்கும் திறன்மற்றும் என்னுடைய அனுபவங்களும் ஆகும்.10 புத்தகத்தை எழுதுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.10 வருட உழைப்பு,அனுபவம் பெற்ற பிறகே அந்த புத்தகங்கள் வெளிவருகிறது.புத்தகம் படிப்பதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.பணிவு,அன்பு,நல்ல பண்பாடு இருந்தால் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றிகளை அடைவீர்கள் என்று வாழ்த்துகிறேன் இவ்வாறு பேசினார்.



 விழாவில் கண்கலங்க வைத்த நிகழ்வுகள் :

 இந்த பள்ளியினை விட்டு போவதற்கு எனக்கு அழுகையை இருக்கு - எட்டாம் வகுப்பு மாணவி சின்னம்மாள்  கண்ணீர் பேச்சு

8ம் வகுப்பு மாணவி அபிநயா  : நான் ஐந்தாம்  வகுப்பு வரை முன்பு படித்த பள்ளியில் எந்த போட்டியிலும் பங்கேற்றது கிடையாது.ஐந்தாம்  வகுப்பில் இந்த பள்ளிக்கு வந்த பிறகு இங்கு தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களின் தொடர்ந்த தூண்டுதல் காரணமாக அனைத்து போட்டிகளிலும் பங்குஎடுத்து 20 சான்றிதழ்கள் வைத்து உள்ளேன்.சேவுகன் அண்ணாமலை கல்லூரிக்கு களப்பயணம் போனதால் கண்டிப்பாக கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.எனக்கு இந்த பள்ளியை விட்டு போகவேண்டும் என்று எண்ணும்போது அழுகையை வருகிறது.

50சான்றிதழ்கள் பெற்று அசத்திய மாணவி காயத்ரி சொல்வதை  கேளுங்கள் :

இந்த பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு முதல் படித்து வருகிறேன்.பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சுமார் 50 சான்றிதழை வைத்துள்ளேன்.இது எனக்கு பெருமையாக உள்ளது.வங்கிக்கு சென்றது,ரூபாய் 10இல் வங்கி கணக்கு துவங்கியது என அனைத்துமே எனக்கு பெரிய விசயமாக உள்ளது.



மாணவி மாதரசி : அஞ்சல் அலுவலகம்,அரசு தோட்டக்கலை பண்ணை,காவல் நிலையம் என அனைத்து இடங்களுக்கும் நேரடியாக களப்பயணம் சென்று வந்துள்ளேன்.இதன் மூலம் எனக்கு பல்வேறு வாழ்க்கை அனுபவங்கள் பெற்று உள்ளேன்.மூன்று ஆண்டு காலத்தில் திருச்சி,மதுரை,சென்னை என அனைத்து ஊர்களில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று 21 சான்றிதழ்களை பெற்று உள்ளேன்.

வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுத்த பள்ளி 

எட்டாம் வகுப்பு மாணவி சந்தியா  : இந்த பள்ளியில் நான் சேர்ந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.வங்கி ,வேளாண்மை கல்லூரி,மதுரை வானொலி நிலையம் சென்றது,வானொலி நிலையம் நிகழ்ச்சியில் பங்கேற்றது,திருச்சி அண்ணா கோளரங்க போட்டிகளில் பங்குபெற்றது என அனைத்துமே எனக்கு மறக்க முடியாத நிகழ்வு.நான்கு ஐ.எ .எஸ்.,ஐந்து ஐ.ஆர்.எஸ்.என அனைவரிடமும் கேள்விகள் கேட்டது,அவர்களை சந்தித்தது,பல்வேறு நாடுகளில் இருந்து பல நிலைகளில் உள்ளவர்களுடன் கலந்துரையாடல் செய்தது என அனைத்துமே அருமை.நான் படித்த இந்த பள்ளியில் நல்ல குடிமகளாக உருவாகி மீண்டும் வந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு கொள்வேன் என்று நம்பிக்கையுடன் செல்கின்றேன்.என்று பேசினார்.



போட்டிகளில் தோல்வியடைந்தால் தட்டி கொடுக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் :

   ஐந்தாம் வகுப்பு மாணவர் வெங்கட்ராமன் : எட்டாம் வகுப்பு படிக்கும் அக்காக்கள் ,நாங்கள் போட்டிகளுக்கு சென்று விட்டு வந்தால் தோல்வி அடைந்தால் எங்களை தட்டி கொடுப்பார்கள்.அடுத்த முறை ஜெய்க்கலாம் என்று நம்பிக்கை தருவார்கள்.வெற்றி அடைந்து வந்தால் எங்களை பாராட்டுவார்கள்.எட்டாம் வகுப்பு அண்ணன் சஞ்சீவ் எனக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை எல்லாம் அன்புடன் சொல்லி கொடுப்பார்.அவர்கள் எங்களை விட்டு பிரிவது எங்களுக்கு சங்கடமாக உள்ளது.



அக்காக்களை பிரிவது எண்ணி அழுகையாக வருகிறது :

ஏழாம் வகுப்பு மாணவிகள் கீர்த்தியா,சந்தியா ஆகியோர் எட்டாம் வகுப்பு மாணவிகளை பிரிவது தொடர்பாக பேசியதாவது :
                                    எங்களுக்கு எங்கள் சொந்த அக்கா எட்டாம் வகுப்பு முடித்து செல்லும்போது ஐந்தாம் வகுப்பு படித்ததால் அப்போது ஒன்றும் தெரியவில்லை.ஆனால் இப்போது இவர்கள் எங்களை விட்டு வேறு பள்ளிக்கு பிரிந்து செல்வது எங்களுக்கு அழுகையாக வருகிறது.எங்களுக்கு பல விதங்களில் முன்னோடியாக இருந்த அக்காக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .





பட விளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ ,மாணவியர் விடை பெறும் நிகழ்ச்சியில் ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவிகளிடம் வழங்கிய பொது எடுத்த படம்.அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார்.தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை இணை செயலர் ஆதிரெத்தினம்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

No comments:

Post a Comment