Monday 8 April 2019


திரைப்பட நடிகர் சண்முகராஜா மாணவர்களுடன் கலந்துரையாடல்
 
 ஒவ்வொருவரின் தனி திறமையை வெளிக்கொணர்வதே
கல்வியின் வெற்றி








தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திரைப்பட நடிகர் சண்முகராஜாவுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.
                                              ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.திரைப்பட நடிகர் சண்முகராஜா பேசும்போது, இந்த உலகத்தில் ஒரே மாதிரி உள்ளவர்கள் ஏழு பேர் என்று கூறுவார்கள்.அவர்களில் ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு ஒன்று இருக்கும்.அதேபோல் நம் அனைவருக்கும் தனி திறமை உண்டு.உனக்கு நீதான் ஸ்பெஷல்.அதற்காக அடுத்தவரை குறைவாக என்ன கூடாது.அவர்களுக்கும் தனி திறமை உண்டு.அவர்களுக்கு அவர்கள் ஸ்பெஷல்.மாணவ பருவத்தில் நமது திறமையை கண்டுபிடித்து வெளி கொணர்வதே கல்வியின் வெற்றி.
                                               எனக்கு கவிதை எழுத பிடிக்கும்.நான் கவிதை எழுத ஆரம்பித்தேன்.கவிதை எழுதி வானொலிக்கு அனுப்பினேன்.என்னுடைய திறமையை அறிந்த பின் டெல்லியில் சென்று பயிற்சி பெற்றேன்.நடிப்பு துறையில் வாய்ப்பு கிடைத்தது.இன்று வெற்றி பெற்றுள்ளேன்.இவ்வாறு பேசினார்.விருமாண்டி,எம்டன்  மகன் ,சண்டைக்கோழி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.மாணவர்கள் சுந்தரேஸ்வரன்,நதியா,காயத்ரி,அய்யப்பன்,ஈஸ்வரன்,பாக்கியலட்சுமி,நித்திய கல்யாணி ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திரைப்பட நடிகர் சண்முகராஜாவுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் சேது குமணன்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment