Wednesday 10 April 2019

 புத்தகங்கள் வழங்கும் விழா 
புத்தகம் வசிப்பவர்கள்தான் தலைவர்கள் ஆவார்கள் 
படிக்காத புத்தகங்கள் வெறும் காகித கட்டுகள் 

கேள்விகள் கேட்பதன் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள் 

அரசு மருத்துவர் மாணவர்களுக்கு அறிவுரை






தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி நூலகத்திற்கு அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டி குழுவின் சார்பாக  புத்தகங்கள் வழங்கும் விழா  நடைபெற்றது.
                                                         ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.திசைகள் குழு திட்ட இயக்குனர் ஆசிரியை யாஸ்மின் ராணி அறிமுக உரை நிகழ்த்தினார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பரமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நல்ல முகமது முன்னிலை வகித்தார்.அறந்தாங்கி திசைகள் குழுவின் தலைவரும் , அரசு மருத்துவருமான  தெட்சிணாமூர்த்தி மாணவர்களிடம் பேசும்போது : புத்தகங்கள் அதிகம் வாசியுங்கள்.ஒரு நூலகத்தை திறந்தால் நூறு சிறைச்சாலைகளை மூடலாம் .காரணம் நல்ல புத்தகத்தை படிப்பதன் மூலம் நல்ல பண்பு வளரும்.எந்தவொரு விசயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.பள்ளிப் பருவத்திலேயே கேள்வி கேட்கும் பழக்கத்தை வளர்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.மாணவர்கள் அய்யப்பன்,காயத்ரி,அஜய்பிரகாஷ்,நதியா ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.சமூக ஆர்வலர் டெய்சி ராணி ஏற்புரை வழங்கினார்.குழு உறுப்பினர் தினேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.பள்ளி மாணவர்களிடம் புத்தகங்கள் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.அறந்தாங்கியில் இருந்து 20கும் மேற்பட்ட திசைகள் குழுவினரும் ,ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி நூலகத்திற்கு அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டி குழுவின் சார்பாக  புத்தகங்கள் வழங்கும் விழா  நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பரமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நல்ல முகமது முன்னிலை வகித்தார்.அறந்தாங்கி திசைகள் குழுவின் தலைவரும் , அரசு மருத்துவருமான  தெட்சிணாமூர்த்தி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment