கண்ணுக்கு பின் குத்தல், மாலை நேரத்தில் காய்ச்சல், தொடர் உடல் சோர்வு இருந்தால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்
அரசு மருத்துவர் தகவல்
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
தேவகோட்டை-
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது.
முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை
தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கணபதி ,செவிலியர் உமா மஹேஸ்வரி , மருந்தாளுனர் கனிமொழி ஆகியோர் பள்ளியில்
உள்ள அனைத்து மாணவர்களின்
உடல்களையும் பரிசோதித்தார்.மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை
கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.கண்ணுக்கு பின் குத்தல், மாலை நேரத்தில் காய்ச்சல், தொடர் உடல் சோர்வு இருந்தால் உடனே மருத்துவரை சந்தியுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் சில
நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு
செல்ல பரிந்துரைத்தனர்.சில நோய்களுக்கு மாத்திரைகள்
வழங்கப்பட்டது.முகாமின் நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம்
: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது.தலைமை
ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை
தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கணபதி ஸ்ரீராம்
,செவிலியர் உமா மஹேஸ்வரி , மருந்தாளுனர் கனிமொழி ஆகியோர் பள்ளியில்
உள்ள அனைத்து மாணவர்களின்
உடல்களையும் பரிசோதித்தார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=juJUKAikwzQ
https://www.youtube.com/watch?v=_TY-S3v2rCY
No comments:
Post a Comment