குழந்தைகள் தின விழா
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
ஆசிரியை ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை
ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிலம்பாட்டம், குழு நடனம், பட்டிமன்றம் என பல்வேறு விதமான மாணவ,மாணவியரின்
கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.மாணவிகள் ரித்திகா, ஹரிப்ரியா,சொர்ணமேகா, லெட்சுமி,விஜய்கண்ணன், நந்தனா ஆகியோர் நேரு பற்றி கவிதை மற்றும் உரை நிகழ்த்தினார்கள் .மாணவர்கள் சுபிக்ஷ்ன், யோகின் ஆகியோர் ஓவியங்கள் வரைந்து அசத்தினார்கள்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
குழந்தைகள் தின விழா நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவ,மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=DqgUsmgfctA
https://www.youtube.com/watch?v=vYS_ok692V8&t=56s
https://www.youtube.com/watch?v=5YifKkHEefE
No comments:
Post a Comment