நன்றி ! நன்றி ! நன்றி !
ஜனநாயகத் தன்மை..
அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பையும், சுதந்திரத்தையும், கேள்வி கேட்கும். உணர்வையும் வளர்ப்பதாக அமைய வேண்டும் ஓர் ஆசிரியனின் வாழ்வு.
அறிவியல் பார்வை..
உள்வாங்கி,உற்று நோக்கி, உளப்பகுப்பாய்வு செய்து, அறிவியல் பார்வைவையை வளரப்பதாய் இருக்க வேண்டும் ஓர் ஆசிரியனின் பணி.
அரசியல் பார்வை..
தெளிவான அரசியல் பார்வை கொண்ட ஆசிரியனே சமூகத்தை சரியான கண்களால் பார்த்து, அதை மாணவர்களுக்கும் கடத்த முடியும். அப்போதுதான் சிறந்த குடிமகன்களையும் உருவாக்க முடியும். இல்லை ஒரு சார்பு கொண்ட மாணவர்களாகவே பயணம் முடிந்து போகும்.
மாந்த நேயம்..
மனிதம் ஊறும் ஓர் ஆசிரியனே சமூகத்தின் ஆதி பகவனாய், அறம் சார்ந்த மனிதர்களை பள்ளியிலேயே செதுக்கிவிட முடியும்.
இத்தனை விழுமியங்களையும் ஒன்றாய் தன்னகத்தே கொண்ட, நமது திசைகள் அமைப்பின் உற்ற நண்பரும், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான திரு. சொக்கலிங்கம் Sir அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤️
- Dr.ச.தெட்சிணாமூர்த்தி, MBBS.,DDVL.,
தலைவர்,
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment