Thursday 16 November 2023

 

பள்ளி   தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

 




மனிதம் ஊறும் ஓர் ஆசிரியனே சமூகத்தின் ஆதி பகவன்  - திசைகள் தலைவர் பேச்சு

அறந்தாங்கி   - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு சார்பாக பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டும் நிகழ்வு  அறந்தாங்கியில்  நடைபெற்றது.

                      அதனில் அறந்தாங்கி  திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி பேசுகையில் , அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பையும், சுதந்திரத்தையும், கேள்வி கேட்கும். உணர்வையும் வளர்ப்பதாக அமைய வேண்டும் ஓர் ஆசிரியனின் வாழ்வு. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம்  தனது தலைமை பண்பாலும், ஆசிரியர்களை ஒருங்கிணைத்தும், பல்வேறு செயல்பாடுகளை தனது பள்ளியில் தொடர்ந்து நடத்தி,மாணவர்களின் கல்வியையும், அவர்களின் பல்வேறு திறன்களையும், வளர்ப்பதில்  முக்கிய பங்காற்றி, ஆசிரியர் சமூகத்திற்கு ஓர் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார். நிகழ்வில் திசைகள் பொருளாளர் முபாரக், பள்ளி தாளாளர் முபாரக் அலி, திசைகள் மின்னிதழின் ஆசிரியர் அண்ணாதுரை, திசைகள் ஒருங்கிணைப்பாளர்கள்  சிவா,  தாஜுதீன், ராவுத்தர் கனி, ஆவுடையார் கோவில் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்  ஆகியோர் பங்கேற்றனர்.

பட  விளக்கம் : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு சார்பாக தலைமை ஆசிரியரை பாராட்டும் நிகழ்வு அறந்தாங்கியில்   நடைபெற்றது..அதனில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி திசைகள் அமைப்பின்  பொருளாளர் முபாரக்,  பள்ளி தாளாளர் முபாரக் அலி, திசைகள் மின்னிதழின் ஆசிரியர் அண்ணாதுரை, திசைகள் ஒருங்கிணைப்பாளர்கள்  சிவா,  தாஜுதீன், ராவுத்தர் கனி,  ஆவுடையார் கோவில் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர்   புத்தக பரிசு வழங்கினார்கள் .

 


No comments:

Post a Comment