Wednesday, 22 November 2023

 கந்தசஷ்டி விழாவில் சொற்பொழிவு நிகழ்த்திய மாணவிகளுக்கு பாராட்டு

 




 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சொற்பொழிவு மற்றும் இறைவணக்கம் பாடிய மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

                              பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் கந்தசஷ்டி விழாவில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். மாணவி ஹரிப்பிரியா சித்ரகுப்த நாயனார் என்ற தலைப்பிலும் , மாணவி முகல்யா  குமரகுருபரர் என்கிற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். இப்பள்ளி மாணவிகள் இறைவணக்கத்தில் கலந்துகொண்டு இறைவணக்கப் பாடல் பாடி பாடினார்கள். இவர்களை பாராட்டி பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் வாழ்த்து தெரிவித்தார். 

                            பயிற்சி அளித்த ஆசிரியைகள் முத்துமீனாள் மற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  மிகப்பெரிய மேடையில் மாணவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியது எண்ணி அவர்களது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர்  கந்தசஷ்டி விழாவில் சொற்பொழிவு நிகழ்த்திய மாணவிகள் மற்றும் இறை வணக்க பாடல் பாடிய மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=UzzKf07Ee64

 https://www.youtube.com/watch?v=WOsxvT2WBgo

 https://www.youtube.com/watch?v=ITg6-fmTBvw

 https://www.youtube.com/watch?v=629oTTq0xqM


No comments:

Post a Comment