நிலவேம்பு குடிநீர் வழங்
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பாக மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் நிலவேம்புகுடிநீ ர் கசாயத்தை மாணவர்களுக்கு வழங்கினார் . பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்கபட்டது .டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும்
விளக்கப்பட்டது. நிலவேம்பு குடிநீர் வழங்க நகராட்சி சார்பாக ஆவண செய்த நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீதர் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்கு நிலவேம்பு
கு டிநீர் கசாயம் வழங்கினார்.நிலவேம்பு
குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் மற்றும்
நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி
தெரிவிக்கப்பட்டது.
வீடியோ : https://www.youtube.com/watch?v=YqjT1NM5UVw
No comments:
Post a Comment