கந்த சஷ்டியில் கலை நிகழச்சிகளால் கலக்கிய பள்ளி
பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு ( அனைத்து மாணவர்களின் நிகழ்ச்சிகளின் படங்களும் உள்ளே உள்ளது )
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவி காவியா வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும்
சொற்பொழிவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியர்கள் முத்துமீனாள் ,முத்துலெட்சுமி,ஸ்ரீதர்
ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக மாணவர் யோகேஷ்வரன் நன்றி கூறினார்.
நிகழ்வில் பரத நாட்டியம், பழநி முருகன் சிறப்புகள் தொடர்பான ஆங்கில பேச்சு ,மழலைகளின் குழு நடனம், உழைப்பை வலியுறுத்தும் வாள் நடனம் ,மொபைல் போன் விழிப்புணர்வு , கண்ணை கவரும் மழலைகளின் முருகன் பாட்டுக்கான குழு நடனம்,பெண்கள் உழைப்பு தொடர்பான கருத்துமிக்க பட்டிமன்றம் , மனமும்,உடலும் பலமானதாக ,உறுதியானதாக இருக்க வேண்டி யோகா
செய்து,விளக்கமும் கொடுத்த நிகழ்வு என அருமையாக ஒரு மணி நேரம் நிமிடங்கள் மாணவர்கள்
பார்ப்பவர்களை அசர வைத்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கந்தசஷ்டி விழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களை பள்ளி தலைமை
ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 11வது ஆண்டாக தேவகோட்டை கந்த சஷ்டி விழா கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=wKEP--l8-rY&t=4s
https://www.youtube.com/watch?v=qciQ76_a-aw
https://www.youtube.com/watch?v=WL_47fhXHXM
https://www.youtube.com/watch?v=lhK9Y9IbS04
https://www.youtube.com/watch?v=aCZ3hUkit28
https://www.youtube.com/watch?v=RV0GCRCWNYU
https://www.youtube.com/watch?v=9W_5cKA_0xI
https://www.youtube.com/watch?v=zRVSJ_vhtrg
https://www.youtube.com/watch?v=R51VgEZ6MEE&t=2s
https://www.youtube.com/watch?v=EAos18iDEXg
https://www.youtube.com/watch?v=b_PfRCWclek
https://www.youtube.com/watch?v=wKEP--l8-rY&t=7s
https://www.youtube.com/watch?v=-23RnwxBR28&t=5s
No comments:
Post a Comment